நமது தமிழக நிதி அமைச்சர் GST கூட்டத்தில் என்ன பேசினாரோ தெரியாது. வெளியே வந்து பேசியதில் இன்னும் தன் பொறுப்பற்ற தனத்தைக் காட்டி இருக்கிறார்.
GSTக்கு முன்னால் நமக்கு ஒரு ரூபாயில் 10 பைசா வந்து கொண்டு இருந்ததாம். GSTக்கு பிறகு இது ஆறு பைசாவாகக் குறைந்து விட்டதாம். இது உண்மை என்றே வைத்துக் கொண்டால் கூட அந்த ஒரு ரூபாய் இப்போது இரண்டு ரூபாய் ஆனதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்து விட்டார். முன்னே கணக்கில் வராமல் வரி கட்டாமல் இருந்த வியாபாரிகளும் இப்போது வரி வலைக்குள் வந்ததைச் சொல்கிறேன்.
இதில் வயிற்றெரிச்சல் என்ன என்றால், இன்னும் அதிகப் பங்கு வந்தால் ஒரு நிதி அமைச்சர் என்ன செய்வார்? இருக்கும் 5 லட்சம் கோடி கடனில் கொஞ்சம் அடைக்கலாம். அல்லது மக்களுக்கான நலத் திட்டங்கள் துவங்கலாம், அணைகள், தொழிற்சாலைகள் இப்படி எத்தனையோ?
நம்ம அமெரிக்க மாப்பிள்ளை என்ன சொல்கிறார்? கூடப் பங்கு வந்தால் ரேஷன் கார்டுக்குக் கொடுத்த 2000க்கு பதில் 5000 கொடுத்து இருப்பாராம். எங்கே போய் முட்டிக் கொள்வது?
நல்க வேளை. மத்திய அரசு குறைவாகக் கொடுக்கிறது.
No comments:
Post a Comment