*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*
% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
% கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
% புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.
% சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.
% பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.
% நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
% தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
% ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
% அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
% காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
% சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
% உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
% எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
% எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல
% அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
% உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை
% எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
% எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
% வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
% எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
% உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை
% இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*
No comments:
Post a Comment