பர்கா - மனித வள அமைச்சராக உங்களின் சாதனைகள் ?
ஸ்ம்ருதி - <<பட்டியலிடுகிறார்>>
பர்கா - இரண்டு வருடங்களில் உங்களின் வருத்தங்கள் ?
ஸ்மிருதி - உங்களுக்கு பேட்டி அளிப்பது எனது மிகப் பெரிய வருத்தம் , அதை தவிர வேறொன்றுமில்லை
பர்கா - அப்போது ஊடகங்கள் வலதுசாரி சிந்தனையாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடனும் ஒருதலைப்பட்சமாகவும் நடக்கிறது என்று சொல்கிறீர்களா ?
ஸ்மிருதி - இல்லை , அனைத்து ஊடகங்களும் இல்லை , நீங்களும் உங்களின் NDTV மட்டுமே வேறு யாரும் இந்த அளவு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை
பர்கா - நாங்கள் காங்கிரஸின் மீதும் ஆவனப்படங்கள் தயாரித்துள்ளோம்
ஸ்மிருதி - காங்கிரஸ் ஆளும் கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பாஜவின் காரியகர்த்தாக்கள் கொல்லப்பட்டதை பற்றி வெகுண்டு எழுந்தீர்களா ?? அல்லது தலித் பெண் ஜிஷா கொல்லப்பட்டதை பற்றி ஏதும் சிரத்தை எடுத்து செய்தி வெளியிட்டார்களா ? காங்கிரசுக்கும் அதன் தலைமைக்கும் துணையாக ஒரு ஸ்டெப்னியை போன்று தானே நீங்கள் என்றுமே செயல்பட்டீர்கள் ? ஒரு வாதத்தில் உங்களின் கருத்தாக்கம் அனைத்தும் ஒன்று இடதுசாரி சார்ந்ததாக இருக்கும் அல்லது காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும் உங்களால் ஏன் நடுநிலையான கருத்துக்களை என்றுமே சொல்ல முடிந்ததில்லை , ஒரு ஊடகவியளாராக உங்களின் சுய கருத்தை திணிக்காமல் உண்மையான செய்தியை வெளியிட்டிருக்கிறீர்களா ??
பர்கா - சமூக வலைதலங்களில் என்னைப்பற்றி தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள் , எனது புகழுக்கு பங்கம் விளைவிக்கிறார்கள் ...
ஸ்மிருதி - நானும்தான் அவமதிக்கப்படுகின்றேன் , சமூக ஊடகங்களில் மட்டுமல்ல ஊடகவியலாளர்களால் , அரசியல்வாதிகளால் கூட , ஆனால் நான் தினமும் இரவு 9 மணிக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி இந்த குறையெல்லாம் முன் வைப்பதில்லையே ? நீங்களுமே தன்மை படுகொலை செய்திருக்கிறீரகளே ( character assassination) எனது புகழுக்கு கலங்கம் விளைவிக்க ? செய்திருக்கிறீர்கள் தானே ??
பர்கா - நானா எப்போது ?
ஸ்மிருதி - நிறைய முறை , நீங்களும் NDTVயும் கடந்த 13 வருடங்களாக மோடியை ஒரு சாத்தானாக உருவகப்படுத்தினீர்கள்.மோடியின் தாயைப்பற்றிய காங்கிரசாரின் அவதூறுகளைப்பற்றியோ , காங்கிரஸ் தலைவர் ரஷித் ஆல்வி என்னை அவதூறு செய்ததைப்பற்றியோ உங்களின் இரவு 9மணி நிகழ்ச்சியில் விவாதிக்க முடியுமா ???
No comments:
Post a Comment