கொரோனா கொடுத்த கடும் நிதி நெருக்கடி, மதுகடை சிக்கல், மத்திய அரசிடம் தன் வெட்டி மிரட்டல் பலிக்காத நிலையில் திமுக அரசுக்கு வேறு வழி தெரியவில்லை
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தில் கைவைக்கும் துணிவும் இந்த அரசுக்கு இல்லை
இதனால் மெல்ல லாட்டரி பக்கம் சாய்கின்றார்கள், கிட்டதட்ட பல ஆயிரம் கோடி வருமானம் கொடுக்கும் தொழில் அது, ஆனால் அதனால் அழியும் குடும்பங்கள் ஏராளம்
முன்பு லாட்டரி இங்கு இருந்தது அது பலகோடி குடும்பங்களை பாதித்தது, டாஸ்மாக்கை போல சமூக கொடுமையானது
லாட்டரி என்பது வேறொன்றுமல்ல மக்களிடம் பணத்தை பிடுங்கி பரிசு என்ற பெயரில் ஒருவனுக்கு கொஞ்சம் மீதி எல்லாம் அரசுக்கு என அரசு விளையாடும் சூதாட்டம்
இதில் அரசு மட்டும் ஆடாது, லாட்டரி ஏஜென்டுகள் போலிலாட்டரி கோஷ்டிகள் எல்லாம் புகுந்து ஆடும்
இதில் தேசவிரோத சக்திகள், கருப்புபண முதலைகள் என எல்லாம் புகுந்து மாபெரும் மர்ம குழப்பம் ஒரு பக்கம் நடக்கும்
இதில் மிகபெரிய சர்ச்சையானர் லாட்டரி மார்டின்
அவரை போல் இன்னும் பலர் உண்டு, இவர்களை குறிவைத்துத்தான் ஜெயலலிதா லாட்டரியினை முடக்கினார், தமிழகம் அதை வரவேற்றது
ஜெயலலிதா செய்த மிகபெரிய நல்ல விஷயங்களில் லாட்டரி ஒன்று , கந்துவட்டி ஒழிப்பு இன்னொன்று
மதுகடைகளை தனியார் அட்டகாசத்தில் இருந்து அவர்தான் மீட்டார், இல்லையேல் மாபெரும் அராஜகம் அதன் பெயரால் இங்கு நடந்திருக்கும்
ஜெயாவின் திட்டங்கள் ஓரளவு மக்கள் பாதுகாப்பு கொண்டவை என்பதை மறுக்க முடியாது
ஆனால் லாட்டரியில் சுவை கண்ட கொஷ்டிகள், மார்ட்டின் போன்ற கோஷ்டிகள் 2006ல் இருந்தே கருணாநிதியினை நெருக்கின
ஆனால் தமிழக லாட்டரியுடன் தேசவிரோத சக்திகள் இணைவதாலும் மிகபெரிய மர்மங்கள் அதில் கலப்பதாலும் மத்திய உள்துறைக்கு தமிழகம் மேல் சந்தேகம் இருந்தது
அப்பொழுது டெல்லி கூட்டணியில் இருந்த கருணாநிதி இதை தவிர்க்க லாட்டரியினை அனுமதிக்கவில்லை
இப்பொழுது அனுபவம் இல்லா ஸ்டாலினை ஒருபக்கம் வளைக்கும் லாட்டரி கோஷ்டிகள் இன்னொரு பக்கம் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் போன்றோரை பேசவிட்டு பல்ஸ் பார்க்கின்றன
கார்த்தி சிதம்பரம் லாட்டரி வேண்டும் என்கின்றார், அதிமுக தரப்பில் கனத்த அமைதி
ஜெயலலிதா விரட்டிய திட்டத்தை அனுமதிக்க கூடாது என ஒரு அதிமுகவினர் வாயிலும் வார்த்தை வரவே இல்லை
இது திமுகவுக்கு சாதகமாகலாம், இனி லாட்டரி வரலாம்
லாட்டரி வந்தால் மார்ட்டின் போன்ற மர்ம சக்திகள் உள்ளே வரும், அவர்களால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் எல்லா போராட்டங்களுக்கும் நிதி செல்லும், மாநிலம் அமைதியாக இராது
முக ஸ்டாலின் திறமையான ஆட்சியாளர் என்றால் லாட்டரியினை அனுமதிக்க கூடாது, யார் சொல்லியோ கேட்டு அனுமதித்தால் மிகபெரிய விளைவுகளும் நெருக்கடியும் ஆட்சிக்கு வரும்
ஆக உலக மாந்தர்களே தமிழ்நாட்டு திராவிட சாதனை என்ன?
ஊரெல்லாம் குடிக்க வைப்பது, குடித்த பின் சூதாட வைப்பது
தமிழ்நாட்டை உலக முன்மாதிரியாக மாற்றுவோம் என சொன்ன திமுக, இப்பொழுது கோவா போலவும், மக்காவ் தீவு போலவும் ஒரு உல்லாச பூமியாக மாற்ற முனைவதெல்லாம் கால கொடுமை
10 ஆண்டு திட்டம் என திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் லாட்டரி பற்றியெல்லாம் அறிவிப்பு இல்லை அனால் வருகின்றது எப்படி?
1967ல் அவர்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையில் மதுகடை கிடையாது ஆனால் பின்னர் வந்தது.
அதுதான் திமுக
அவர்கள் சொன்னதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள், சொல்லாதது எல்லாம் செய்வார்கள்.
No comments:
Post a Comment