திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.தொடர்ந்து தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த ஆ.ராசா அதனபிறகு தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்தார். ஏற்கனவே சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அங்கு கொடுக்கபட்ட சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பு கொடுத்தகாததால், இறுதியாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் சிகிச்சையில் இருக்கும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து விசாரித்திருந்தார். இந்நிலையில், பரமேஸ்வரியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆ ராசாவின் மனைவியின் பிரேத உடல் கிறிஸ்துவர்கள் வைக்கும் சவ பெட்டியில் வைக்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது இந்து என பிராமண பத்திரத்தில் தாக்கல் செய்து தனி தொகுதியில் போட்டியிட்டவர் ராசா மேலும் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்தும் வருபவர் ராசா, இவரது மனைவியின் இறுதி சடங்கு சவ பெட்டியில் வைக்கப்பட்டது அவர் கிறிஸ்த்தவர் என்பதை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.
இதனைபலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அர்ஜுன் சம்பத் இது குறித்து பதிவு ஒன்றிணை வெளியிட்டுள்ளார் அதில் ."தமிழன் இந்து இல்லை"ன்னு சொல்றவன் எல்லாத்துக்கும் பின்னாடியும் ஒரு #மதம் இருக்கு..
வெறும் #ஓசியில கிடைக்க கூடிய #தலித் #இட_ஒதுக்கீட்டு சலுகைக்காக மட்டுமே #இந்து என்ற பெயரில் இன்னும் எத்தனை பேருடா வருவீங்க..!
#இடஒதுக்கீடு சலுகையை ஆட்சியில் இருப்பவனும், அரசு பதவில் இருப்பவனும் மட்டுமே அனுபவிக்கிறான்...! உண்மையான #ஏழை_தலித் மக்கள் இன்னும் ஏழையாகவே இருக்கிறார்கள்...! இப்படிப்பட்ட இடஒதுக்கீடு தேவையா என சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment