இளமையில் செல்வச் செழிப்புடன் ஆடம்பர வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க இளம் பெண் தமிழ் நாட்டில் மருத்துவ சேவை செய்துக் கொண்டிருக்கும் தன் பெற்றோர்களைக் காண இந்தியா வருகிறார்.
ஒரு நாள் இரவு அவள் வீட்டின் கதவைத் தட்டுகிறார் பிராமணர் ஒருவர். தன் மனைவி பிரசவ வலியில் உயிர்ப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் வந்தால் உதவியாய் இருக்கும் என்று அழைகிறார். அவ்விளம்பெண் தனக்கு மருத்துவம் தெரியாது எனவும் தன் தந்தையாரை அழைத்துச் செல்லுங்கள் என்கிறார். அதற்கு அந்த பிராமணர் தன் வீட்டுப் பெண்களைக் காண ஆண் மருத்துவரை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி சென்று விடுகிறார். சற்று நேரத்தில் இன்னொருமுறை கதவு தட்டப்படுகிறது. இம்முறை ஒரு முஸ்லீம் . இதே போன்ற காரணத்தினால் அவரும் ஏமாற்றத்துடன் வெளியேறுகிறார். மீண்டும் ஒருவர் . சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மூன்று பெண்களும் இறந்து விடுகின்றனர். ஒரே இரவில் நடந்த இந்த மூன்று சம்பவங்களும் அப்பெண்ணை உறங்க விடவில்லை.
இந்தியாவில் பெண் மருத்துவர்களின் தேவையை இந்த சம்பவங்கள் அப்பெண்ணிற்கு உணர்த்துகிறது.
விடியும்பொழுது அவள் ஒரு உறுதி எடுக்கிறாள். மீண்டும் அமெரிக்கா செல்கிறாள். மருத்துவம் பயின்று இந்தியா திரும்புகிறாள்.
சில மிஷினரிகளின் உதவியுடன் 1 படுக்கையுடன் கூடிய சிறிய மருத்துவமனை 1900 -ல் உருவாகிறது. அங்குள்ள கிராமத்துப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் கற்றுக் கொடுத்து குதிரை வண்டியில் ஊர் ஊராக சென்று மருத்துவ சேவை செய்கிறார். பின்பு இந்தியாவிலேயே முதன் முதலாக செவிலியர் கல்லூரி உருவாக்குகிறார். பின்பு மருத்துவ கல்லூரியும் உருவாகிறது.
வேலூரில் க்ரிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் (CMC ) என்ற பெயரில் ஒரு படுக்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட அந்த மருத்துவமனையில் இன்று 3000 படுக்கைகள் உள்ளது . வருடத்திற்கு 3 மில்லியன் வெளிநோயாளிகள் வந்து செல்கிறார்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர். வருடத்திற்கு 20,000 திறக்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்ப்படுகிறது. 95 வார்டுகளுடன் 15 அவசர சிகிச்சை பிரிவுகளுடன் உலக புகழ் பெற்ற சிறந்த மருத்துவமனையாகவும், சிறந்த மருத்துவ கல்லூரி என்ற பெருமையுடனும் விளங்குகிறது . தன் காலத்திற்கு பிறகும் மக்களுக்கு பயன்பட சேவை அமைப்பை உருவாக்குகிறார். அப்பெண்ணின் பெயர் ஐடா ஸ்கடர் .
சக மனிதனின் மீது அப்பெண் கொண்ட நேசம் பல கோடிகணக்கான மக்களுக்கு இன்றும் வாழ்வை அளித்துக் கொண்டிருக்கிறது அவர் காலத்திற்கு பின்பும் ! தூய அன்பு காலங்களைக் கடந்தும் வாழும்!
நன்றி ....வாழ்க வளமுடன்...... |
No comments:
Post a Comment