படித்தவர்களே ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் கொடுமை...!
எவனாவது ரெண்டு இட்லிக்கு ஒன்னேகால் ரூ. வரி செலுத்த முடியாத
நிலையிலா இருக்கிறான்...?
கொத்தனார்கூட பதினைந்தாயிரம் ரூ. ஆன்ட்ராய்டு போன் வைத்துள்ளான்...
அந்த போனுக்கு மூவாயிரம் ரூ. வரி போடுவதைப்பற்றி இவனுக்கு கவலையில்லை...?
சித்தாளு வேலை பார்க்கும் ஒருத்தன் ஒரு லட்சம் ரூ. பைக்கில் வருகிறான்... அதில் விதிக்கப்படும் வரி மட்டுமே பணிரண்டாயிரம்... அதைப்பற்றி கவலையில்லை...
ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்து எழுபதனாயிரம் சம்பளம் வாங்கும் வாத்தி ஒன்னேகால் ரூ. ஜி.எஸ்.டி.க்காக மோடியை கீழ்த்தரமாக விமர்சிக்கிறான்...!
ஒரு சில கடைகளில் இரண்டு இட்லி இருபது ரூ... ஒரு சில ஓட்டல்களில் முப்பது ரூ.. சில ஓட்டல்களில் நாற்பது ரூ...
அவனுங்க அரசாங்கத்திற்கு வரி கட்டாமல்
கொள்ளையடிப்பதில்
நமக்கு எந்த பிரச்னையும் இல்லை... இருபது ரூ. பெறுமான இட்லிக்கு முப்பது ரூ. கொடுப்பதிலும் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை...
அத்தியாவசியமற்ற நூறு மல்லிகைப்பூவை நாற்பது ரூ. கொடுத்து வாங்கி தலைக்கு வைப்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை...!
ஓப்பனாக பில்லில் ஒன்னரை ரூ. வரி என போட்டால் அதை மட்டும் கட்ட முடியாமல் அனைவரும்
ஏழையாகி விடுகிறார்கள்...!
வர்த்தகர்கள் கொள்ளையடித்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை... எங்க பிரச்னையே மோடிதான்...
இந்த ஜி.எஸ்.டி.க்காகத்தான் இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் மோடியை வணங்குகிறார்கள்...
ஆனால் எங்களுக்கு மட்டும் மோடி எதிரிதான்...?
ஏனென்றால் நாங்க மட்டுமே இந்தியாவில் மெத்த படித்த அறிவாளிகள்.....?
கேவலம்... எந்த பொது சிந்தனையோ பரந்த மனப்பான்மையோ சமூக அக்கரையோ கிடையாது... அரசியல்வாதிகள் ஆற்றுமணலை தூர்வாரி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறான்..
கேட்பாரில்லை.. மனசாட்சியில்லை... கடவுளுக்கு பயமில்லை.. மரியாதையுமில்லை...
கேவலம்.. இருபது ரூ. டோக்கனை கொடுத்து அறுபதாண்டு பாரம்பரிய கட்சியையே டிப்பாசிட் இழக்க வைக்கிறான்...
எப்படிப்பட்ட கீழ்த்தரமான மனநிலையில் தமிழக வாக்காளன்..!
பிள்ளையாரையும் கும்பிடுகிறான்.. அவரை செருப்பால் அடித்த பெரியாரையும் கும்பிடுகிறான்..
பிள்ளையாரை நீ மனப்பூர்வமாக நம்பினால் பெரியாரை அல்லவா நீ செருப்பால் அடிக்க வேண்டும்... என்ன எழவு மன நிலையோ..?
மனதளவில் தனிமனித ஒழுக்கமில்லை...
பொது வாழ்வில் நீதி நேர்மை இல்லை..
தமிழகம்
தலைநிமிர வாய்ப்பே
இல்லை...
வருங்கால
தலைமுறை
நாசமாவதற்கு முன்
கடவுளே இந்த தமிழகத்தை காப்பாற்றுவாயாக...!
No comments:
Post a Comment