இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அதானி இருக்கின்றனர்-
அதுமட்டுமல்ல, ஆசிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்-
இது போன்ற செய்திகள் வெளியானால் உடனே நமது தமிழக தாலிபான்களும், அல்லேலூயாக்களும், உடன்பிறப்புகளும் ஓடிவந்து இவர்கள் இருவரையும் பெற்று வளர்த்து உருவாக்கி பணக்காரர்களாக்கியதே மோடிதான் என்றும், மோடி ஆட்சியில் இருப்பதே இவர்களுக்காகத்தான் என்பது போலவும் விமர்சனங்கள் செய்வர் -
என்னவோ 2014-க்கு முன்பு இவர்கள் இருவரும் ரயில்களில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது போலவும், மோடி பிரதமரான பிறகு இவர்கள் இருவரையும் வளர்த்துவிட்டது போலவும் பேசுவார்கள் -
அடேய்களா,
13 வருட முதல்வர், 7 ஆண்டுகள் பிரதமர் என்று தொடர்ச்சியாக 20 வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும் மோடியின் தாய் இன்னும் கூட ஆட்டோவில்தான் சென்றுகொண்டிருக்கிறார்-
தன்னுடைய சொந்த தாய், உடன்பிறந்தவர்கள் குடும்பத்திற்கே சொத்து சேர்க்க உதவாத பிழைக்கத் தெரியாத பிரதமர் மோடி என்ன டேஷ்க்கு அம்பானிக்கும், அதானிக்கும் சொத்து சேர்த்துக் கொடுக்கனும்னு முரசொலி படிக்கற எவனும் சிந்திச்சுக்கூட பார்க்க மாட்டான்-
ஆனால், உண்மையில் அம்பானியின் சாம்ராஜ்யம் வளர்ந்ததே காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான், அதுமட்டுமல்ல முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்தள்ளி 12 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது 2007 காலகட்டத்தில் அதுவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் -
ஒரு நாடு முன்னேற தொழிலதிபர்கள் தேவை எனவே நான் முரசொலி வாசகர்கள் போல் காங்கிரஸை குறைகூற மாட்டேன்-
அம்பானியும், அதானியும் இல்லையென்றால் இங்கே சில கோடி மக்கள் பிச்சைதான் எடுக்க வேண்டும் -
இந்த நிமிடமே இவர்கள் இருவரும் தங்கடைய அனைத்து தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு வீட்டில் காலை ஆட்டிக்கொண்டு ஓய்வெடுத்தால் கூட பத்துத் தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிட முடியும் -
எனக்குத் தெரிந்து கம்யூனிஸ்ட்டுகளின் தொல்லையால் இதேபோல ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த நான்கு பஞ்சாலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன_
ஆம், பழனி அருகே VK மில்ஸ் என்ற பஞ்சாலை மணி நாயக்கர் என்பவரால் நடத்தப்பட்டு வந்தது அந்த மில்லின் பெயராலேயே அந்த ஊரும் அழைக்கப்பட்டு வந்தது, அந்த ஊர் உருவானதே அந்த மில்லால்தான் -
இதேபோல இவருக்குச் சொந்தமாக இதேபோன்று நான்கு இடங்களில் பஞ்சாலைகள் இருந்தன, நேரடியாக குறைந்தது ஐந்தாயிரம் குடும்பங்களுக்கும் மறைமுகமாக சில ஆயிரம் பேர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிய நிலையில் தொடர்ந்து தொழிற்ச்சங்கங்களின் தேவையற்ற நெருக்கடிகளால் விரக்தியுற்ற மணிநாயக்கர் இருபது வருடங்களுக்கு முன்பு ஒரே நாளில் பஞ்சாலைகளை இழுத்து மூடினார் -
தினமும் மூன்று ஷிப்ட்டும் கையில் உணவுக் கூடையுடன் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்திருந்த மில்கேட்டில் எதிரில் வரிசையாக சிகப்புக் கொடிகள் நடப்பட்டன_
நடுத்தெருவுக்கு வந்தன ஐந்தாயிரம் குடும்பங்கள், அவர்களில் பலர் இன்றும் வேலைகள் அமையாமலும், செக்யூரிட்டிகளாகவும் வேலைக்குச் செல்வதை நான் நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் -
ஆனால், அந்த மில் ஓனர் மணிநாயக்கர் இன்றுவரை வீட்டில் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்-
ஆகவே, எதற்கெடுத்தாலும் அம்பானி ஒழிக, அதானி ஒழிக, கார்பரேட்டுகள் ஒழிக என்று கோஷம் போடும் போராளிகளே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் -
அவர்கள் இல்லையென்றால் நீங்கள் பிச்சை கூட எடுக்க முடியாது, ஏனென்றால் பிச்சை போடக்கூட எவனும் இருக்க மாட்டான் ஜாக்கிரதை -
தேசப்பணியில் என்றும் -
No comments:
Post a Comment