சுறுக்கமாக சொல்லுவதென்றால் சூர்யன், கணபதி, சிவன், அம்பாள், விஷ்ணு ஆகிய ஐந்து தேவதா மூர்த்திகளை ஒரே பீடத்தில் எந்த பேத-பாவமும் (bedha-bhavam) இல்லாமல் சம நிலையுடன் விதிப்படி பூஜிப்பதுதான் பஞ்சாயாதன பூஜை என்பதாகும்.
நம் முன்னோர்கள் இதை கடைப்பிடித்து வந்துள்ளனர். இடையில் இது பல இல்லங்களில் மறைந்துபோய்விட்டது.
பொதுவாக சிவன் (பாண லிங்கம்) நடுவிலும், சூரியன் (ஸ்படிகம்) தென் கிழக்கிலும், கணபதி (சோனபத்ரம் & சிவப்பு கல்) தென் மேற்கிலும், அம்பாள் (காரீயம்) வடமேற்கிலும், விஷ்ணு (சாளக்ராமம்) வடகிழக்கிலும் ஒரே தட்டில் (பீடத்தில்) வைத்து பூஜை செய்வது சம்ப்ரதாயம்.
தினமும் விஸ்தாரமாகவோ அல்லது லகுவாகவோ அவரவர்கள் செளகரியப்படி பூஜை செய்யலாம். பரிச்சயம் இருந்தால் ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம். குறைந்தது நாம் சுறுக்கமாகவாவது இந்த பூஜையை அனைவரும் தினமும் செய்யும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திகொண்டால் நல்லது.
மடி ஆச்சாரம் அவசியம் தேவை.
No comments:
Post a Comment