Wednesday, May 26, 2021

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் !

 கராவலம்பம் !

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த பாரத தேசமெங்கும் நிலைநிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி "ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்" ஆகும். இந்த துதி பிறந்த வரலாற்றை காண்போம்.
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது வரலாறு.
ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம். அதிலிருந்து ஒரு ஸ்லோகம் !
ஸ்ரீமத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் !
பொதுப் பொருள்: திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே, கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா! வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே, என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
May be a cartoon of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...