ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை
இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி
மனிதர்களின் உடலில் வரும் பலநோய்களுக்கு அவர்களின் மூச்சு விடும் முறையும் முக்கிய காரணியாக அமைகிறது.
ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள்.
பின்னர் மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.
எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.
ஆனால், 100 க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை.
உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.
சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.
பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என்று தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.
No comments:
Post a Comment