வர வர எது எதை சிலாகிப்பது
எது எதற்கு பெருமை பட்டுக்கொள்வது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. யார் வருத்தப்பட்டார்கள் இப்படி தள்ளாதவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென்று?!
இதற்குதான் அரசு ஊழியர்களுக்கு
58 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்புவது போன்று அரசியல்வாதிகளையும் அனுப்பிவிட வேண்டும். இவரை சொல்லி பிரயோஜனமில்லை. ஓட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும்.
இதுவே அந்த மக்கள் தங்கள் வீட்டு வேலைக்கோ, தங்கள் கடைகளிலோ, நிறுவனத்திலோ 80 வயதில் உள்ள முதியவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்வார்களா? அட்லீஸ்ட் ஓட ஓடீயார கூட பக்கத்தில் சேர்க்க மாட்டார்கள்.
நாளை உடம்புக்கு ஏதாவது வந்து, முடியவில்லையென்றால், யார் வைத்து வைத்திய செலவு செய்வது என்ற நல்லேண்ணம்தான் காரணம்.
50-ஐ தொட்ட பெற்றோர்களையே முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிட்டு மறுகாரியம் பார்க்கும் சமூகம் இது!!
அதுவே அரசியல் என்று வந்துவிட்டால் "கட்சி பாசம்" மற்றும் "துட்டு" பாசம் கண்ணை மறைத்து விடுகிறது!! நிர்வாகம் எக்கேடு கெட்டு போனால் அவர்களுக்கென்ன?!
அதனால்தான் கலைஞர் போன்றவர்கள் 90-களை கடந்தும் நடக்க முடியாத நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்துக்கொண்டே, மக்கள் பணியாற்றினார்கள்?! போலும்...
No comments:
Post a Comment