Saturday, November 6, 2021

கர்ணனின் வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?..

 துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு...

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்..
இப்போது கர்ணனின் முறை...
அம்பை நாணில் பூட்டியாயிற்று...
ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்...
மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்...
குருவே இது மிகவும் அதிகாலை நேரம்..
இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள்..
இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன்..
ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும்..
எனவே நான் கொல்ல மாட்டேன்
என்றானாம்...
கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார் !...
பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உங்களை நேசிப்பவர்களிடமோ, அல்லது உங்களை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்...
வாழ்க்கை ஒரு வட்டம்...
தொடங்கிய இடத்துக்கே
வந்தாகனும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...