ஒரு மருத்துவரின் பரிந்துரை சீட்டு(prescription) இன்றி மாத்திரை மருந்து விற்பனை செய்யலாகாது. மேலும் உட்கொள்வதோ பயன்படுத்துவதோ கூடாதென்பதை சுட்டிக்காட்டவே அச்சிடப்பட்ட கோடுதான் அது.
டியூபர்குளோஸிஸ் ,HIV,
மலேரியா ,மற்றும் சிறுநீரக குழாய் தொற்றுகளுக்கான மருந்துகள் நிச்சயமாக மருந்தகங்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும். சிகப்பு கோடு எச்சரிப்பது இதுவே
இதுவே அனாசின், பாராசிட்டமல் இல் சிகப்பு காேடு இல்லை என்பதாலே இவைகளை மருந்தகங்களில் எளிதில் பெறமுடிகிறது....
ஒரு மருத்துவரின் மருந்து சீட்டில் மேல்" Rx"எனும் குறியீடு இருப்பதை கவனித்ததுண்டா?( படம்2) இது மருத்துவரின் "மருந்துக்கான பரிந்துரை"என்பதின் அடையாளமாக கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்ட குறியீடு. "எடுத்துக்கொள்"என மருந்து பரிந்துரைக்கு அடையாளம்.
நவீன காலத்தில் மருத்துவரால் என்னுடைய மருத்து ஆலோசனை என்பதனை குறியிடும் விதத்தில் "Adv,"என குறியிடப்படுகிறது.
சரி ,இது தவிர NRx , XRx எனும் குறியீடுகளும் (படம்3&4) வருவதை கவனித்ததுண்டா?
பொதுவாக NRx என்பதை New Prescription என சொல்வர். பொதுவாக Narcotic and psychotropic substance based drugs எனப்படும் NRx
வகை குறிப்பிடப்படுவதால் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் விற்பனை செய்யலாகாது. எனவே நம்மால் அனாசினைப்போல் பெறமுடியாது.
"மனஅழுத்தம், உளவியல், தூக்கமின்மை,போன்ற நாேய்களுக்கு மற்றும்
மயக்கமருந்து தரவேண்டிய சிகிச்சைகளுக்கு அங்கீகார உரிமைபெற்ற மருத்துவர்கள் (licensed மட்டும் Doctors) NRx மருந்தினை பரிந்துரை செய்வார்கள்.
XRx மருந்துகள் குறிப்பாக மனநல டாக்டர், மயக்கவியல் நிபுணர், புற்றுநோய் மருத்துவர்கள் சிறப்பாக உரிமை (licensed) பெற்றிருக்கும் பட்சத்தில் இவ்வகை மருந்துகள் அவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு இந்த மருத்துவர்களே நேரிடையாக அவர்களின் நோயாளிக்கு கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.
NRx மற்றும் XRx மருந்துகளுக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடு எனில் இந்த மருந்துகளை சிலர் போதையூக்கியாக தவறான முறையில் பயன்படுத்துகின்றனர் என்பதால் தான்.
No comments:
Post a Comment