Thursday, November 4, 2021

தமிழக அரசு மக்கள் பிரச்னைகளை தீர்க்கட்டும்!

 தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாட வேண்டும் என்பதில், இப்போது பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. நாட்டில் மொழிவாரி மாகாணங்கள் உருவான நவ., 1ம் தேதியா அல்லது சென்னை மாகாணத்திற்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18ம் தேதியா? என்ற விவாதம் ரொம்ப ஜோராக நடக்கிறது.


கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக பழனிசாமி, நவ., 1ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட முடிவு செய்தார். தற்போதைய, தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், ஜூலை 18ம் தேதியில் தமிழ்நாடு பிறந்த நாளை சீரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்கிறார். சென்னை மாகாணம் என்று இருந்ததை, 'தமிழ்நாடு மாநிலம்' என பெயர் மாற்றம் செய்த பின், ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டது போல, 'திராவிடச் செம்மல்கள்' பூரித்தனர். அதனால், ஜூலை 18ம் தேதி தான் தமிழ்நாடு பிறந்த நாள் என, அடித்துச் சொல்லி விட்டார் முதல்வர் ஸ்டாலின்.


latest tamil news


எந்த தேதி என்பதில், தமிழக அரசியல் கட்சிகள், தமிழின ஆர்வலர்கள் என பல தரப்பில் இருந்தும், வெவ்வேறு கருத்துகள் வெளிவருகின்றன. தேவை இல்லாமல் பிரச்னையை உருவாக்கி, அதில் இரண்டு கழகங்களும், 'குளிர்' காய்கின்றன. தி.மு.க., தலைவர்கள், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறவில்லை. 'வெள்ளையனே வெளியேறு' என்று மஹாத்மா காந்தி போராட்டம் நடத்திய போது, 'வெள்ளைக்காரர்கள் தான், இந்த நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்' என்றவர், ஈ.வெ.ரா., என்பது நமக்கு தெரியும்.

'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' என்று வீர முழக்கம் செய்தவர் அண்ணாதுரை. தேசியத்திலும், தெய்வீகத்திலும் நம்பிக்கை இல்லாதோர், திராவிட தலைவர்கள். மொழிவாரி மாகாணங்கள் உருவான போது, திருத்தணியை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர், ம.பொ.சிவஞானம். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடி, அதில் வெற்றி பெற்றவர், 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர்.

தமிழ்மொழியைக் காக்க, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. திராவிட அரசியல்வாதிகளின் முன்னோடியான ஈ.வெ.ரா., தமிழை, காட்டுமிராண்டி பாஷை என்று இகழ்ந்து பேசியவர். தமிழ்க் காவியங்களை கொளுத்த வேண்டும் என்றார். தமிழை வளர்க்காமல், அதை வைத்து பிழைப்பு நடத்தி ஆதாயம் தேடிய திராவிட தலைவர்களுக்கு, தமிழ்நாடு பிறந்த நாளை கொண்டாடும் தகுதி இல்லை. எனவே மக்கள் பிரச்னையை தீர்க்கும் வேலையில், தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...