இந்த அதிகார பூர்வ அறிவிப்புக்கு பதில்..
-------
வாழ்த்துக் கூற தகுதி வேண்டும்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுப்பப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததை, சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றால், பண்டிகை முழுமை அடையாது என நினைப்பது அறியாமை.
நம் பாரம்பரிய பண்டிகைகள் எல்லாம், அரசியலை கடந்தவை; அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை.
நம் ஹிந்து பண்டிகைகள், வெறும் சடங்குகள் அல்ல; அவற்றில் விஞ்ஞானமும், மருத்துவமும், உளவியலும் பொதிந்து இருக்கின்றன.
கொண்டாடுவோருக்கு மனநிறைவையும், எதிர்காலத்தை திட்டமிடவும், சவால்களை எதிர்கொள்ளவும், தேவையான மன உறுதியையும், செயலில் புதிய உத்வேகத்தையும் ஊட்டுபவை ஆகும்.
நம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வோருக்கு, சில குறைந்தப்பட்ச தகுதிகள் தேவை.ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ளும் அறிவு, நம் கலாசாரத்தின் மீது நம்பிக்கை, நாகரிகம், மாண்பு இதெல்லாம் இருக்க வேண்டும். அனைத்து மனிதர்களையும் சமமாக நினைக்கும் பங்குவமாவது இருக்க வேண்டும்.
இது எதுவும் இல்லாதவரிடம், வாழ்த்து பெறுவது நமக்கு அவமானம்.
தகுதி இல்லாதவரின் வாழ்த்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.வாழ்த்து என்பது இதயத்தில் இருந்து வர வேண்டும்; அதை கட்டாயப்படுத்தி பெற கூடாது.
நல்லவர் வாழ்த்தும் போது, புண்ணியம் சேரும். தீயவர் வாழ்த்தும் போது, அது பாவத்தையே தரும்.
ஹிந்து தர்மத்தை அழிக்க நினைப்போரோடு நட்பு பாராட்டுபவர், ஒன்று அறியாமையில் இருப்பார் அல்லது பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவராக இருப்பார்.
ஆட்சியை பிடித்து விட்டாலே, நம் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தகுதியை ஒருவர் அடைந்து விட்டார் என கூற முடியாது.
அறிவுடையோருக்கு ஆண்டியும், அரசனும் ஒன்று தான். ஒரு மனிதனின் தகுதி என்பது, அவரின் குணத்தை பொறுத்ததே தவிர, பதவியை பொறுத்தது அல்ல.
No comments:
Post a Comment