Monday, November 15, 2021

*அஷ்டம சனி மற்றும் ஏழரை சனி நடக்கும் பொழுது திருமணம் செய்யலாமா ?**

 # ‘ஏழரைச் சனியின் மற்றும் அஷ்டம சனி காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. ஏழரைச் சனிக்கும், மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம், வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.

# **சுப விஷயங்கள்**
# பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள், சனியின் பிடியில் இருக்கும்போது எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடிந்துவிடும்.
# **குடும்பம் என்றால் என்ன?**
# ஒரு ஆணுக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டத்தில், அவருக்கு ‘குடும்பம் என்றால் என்ன?’, ‘மனைவி - குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன?’, ‘உழைப்பின் அவசியம்’, ‘உழைப்பால் உயரும் நெறி முறை’ போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி பகவான் புரிய வைப்பார்.
# **கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன்**
# அதே போல் பெண்களுக்கு, ‘கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது?’, ‘கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்’, என்று உணர வைப்பது ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில்தான்.
# **அஷ்டமத்து சனி**
# அஷ்டமத்து சனி இரண்டரை வருடங்கள் தான் இருக்கும் என்பதனால் கணவன் மனைவியிடையே வரும் பிரச்சனைகளை சற்றுப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி எவரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் அவர்களின் திருமண வாழ்க்கை நலமாக இருக்கும். ஆனால் ஆண், பெண் இருவருமே விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் திருமணம் விவாகரத்தில் தான் முடியும்.
# **சனி பகவானின் மகத்துவம்**
# ஒரு சிலர் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரைச் சனியின் மேல் பழி போடுகிறார்கள். ஏழரைச் சனி வந்தால் திருமணம் செய்யக்கூடாது என்று திருமணத்தைத் தள்ளிப் போடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறி வருபவர்களுக்குக் கூட, ஏழரைச் சனியின் ஆதிக்க காலத்தில் திருமணம் நடைபெற்று விடும் என்பதுதான் சனி பகவானின் மகத்துவம்.
# **அஷ்டம சனி**
# அஷ்டம சனி நடக்கிறதென்றால் அந்த குடும்பத்தில் சிக்கல்களும், பிரச்சனைகளும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். தேவை இல்லாமலே சண்டைகள் உருவாகும். உங்கள் உறவினர்கள் மூலமாக பல குழப்பங்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை, வேலை இடமாற்றம், சிலருக்கு திடீரென வேலை பறிபோகுதல் இவ்வாறான நிலைமையும் உண்டாகும்.
# **ஏழரைச் சனியால் திருமணம் திருமணம் தடைபடுவதில்லை**
# கால ஜாதக ரீதியாக பல்வேறு தோஷங்களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதி இழந்து தவிப்பவர்கள், ஏழரைச் சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
# **குரு பலம் உள்ளவர்கள் ஏழரை மற்றும் அஷ்டம சனியில் திருமணம் செய்யலாம் **
# கோச்சாரரீதியாக குரு பகவான் சாதகமான நிலையில் காணப்படும் பொழுது , ஜாதகர் திருமணம் செய்யலாம். பொதுவாக , கோச்சாரரீதியாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2,5 ,7 , 9 , 11 போன்ற இடங்களில் நிற்கும் பொழுது குரு பலம் உள்ளது என்று கூறுவார்கள். அப்படி குரு பலம் உள்ளவர்களுக்கு , ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனி நடைபெறும் காலகட்டத்தில் திருமணம் கைகூடுகிறது.
# **சாதகமான தசை , புக்தி , மற்றும் அந்தரம்**
# மேலும் ஜாதகத்தில் 7ம் அதிபதியின் தசை , புக்தி , மற்றும் அந்தரம் நடை பெரும் பொழுதும் , சுக்கிரன் உடைய தசை , புக்தி , மற்றும் அந்தரம் நடை பெரும் பொழுதும் , ஜாதகருக்கு ஏழரை மற்றும் அஷ்டம சனி நடை பெரும் காலகட்டத்தில் திருமணம் நடை பெறுகிறது.
# **தைரியமாக திருமணம் செய்யலாம் **
# ஜாதகருக்கு குரு பலம் , மற்றும் தசாபுக்திகள் சாதகமாக இருக்கும் பொழுது ஏழரை மற்றும் அஷ்டம சனி காலத்தில் திருமணம் நடை பெரும்பொழுது எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தாது.
# **சனி பகவானுக்கு பிரீத்தி**
# மேலும் , சனி பகவானுக்கு பிரீத்தி செய்து இந்த காலகட்டத்தில் திருமணம் செய்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...