இன்று காலை தெருமுனையில் ஒரு பெட்டியில் வாக்சினோடு உட்கார்ந்திருந்த மருத்துவ பணியாளரை பார்த்தவுடன் மனதில் தோன்றியது....
இதே நேரம் போன வருடம் இந்தியா தடுப்பூசி போட ஆரம்பிக்கவில்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் எப்படி கொரோனாவை சமாளிக்க போகிறோம். வாக்சின் எப்பொழுது கண்டுபிடிக்கபடும், அதன் பிறகு அது எவ்வளவு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும், இத்தனை கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த எவ்வளவு செலவாகும், நம் நாட்டில் அவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடியுமா? தயாரித்தாலும் அதன் EFFICACY எப்படி இருக்கும்? அதை நாட்டின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல என்ன மாதிரியான LOGISTICS தேவைப்படும்? இதையெல்லாம் எவ்வளவு சீக்கிரம் செய்து முடிக்க முடியும்? இப்படி நாடு மக்களின் முன் பல கேள்விகளும், குழப்பங்களும் சூழ்திருந்த நேரம்.
இப்படி ஒரு UNPRECEDENTED PANDEMIC SITUATION ல் நாடு தவித்து கொண்டிருந்த போது கூட, எப்படியாவது மோதி பெயரை கெடுக்கவேண்டும் என்ற ஒரே கெட்ட எண்ணத்தோடு வெளிநாட்டு சக்திகளோடு கைகோர்த்து கொண்டு , நம் நாட்டு மருத்துவர்களின் முயற்சிக்கு எல்லா விதத்திலும் இடைஞ்சல் செய்யும் வகையில் தடுப்பூசிக்கு எதிரான கேவலமான பிரசாரத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி அரசியல்வியாதிகள், சில ரெட் லைட் மீடியாக்கள் மற்றும் உள்நாட்டு தேசவிரோத சக்திகள் எல்லாவற்றையும் மீறி உலகமே ஆச்சரியப்படும் வகையில், கடவுளின் ஆசியோடு ஒரே வருடத்தில் இந்த செயற்கரிய சாதனையை மோடிஜியின் சீரிய தலைமையில் செய்து காட்டியுள்ளது பாரதம்.
முன்னேறிய நாடுகளான அமெரிக்காவும், பிரிட்டனும் இன்னும் நாம் போட்ட தடுப்பூசியில் மூன்றில் ஒரு பங்கு கூட போட முடியவில்லை. இன்னமும் அங்கெல்லாம் தினமும் ஒரு லட்சம் பாதிப்புகள் பதிவாகி அந்த வல்லரசு நாடுகள் எல்லாம் நிலைமையை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. உலகம் இந்தியாவின் சாதனையை வாயை பிளந்து கொண்டு பார்த்து ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், நம் ஊரில் சர்வ சாதரணமாக சின்ன சின்ன முட்டு சந்துகளில் எல்லாம் ஒரு செவிலியர் ஸ்டூல் போட்டு உட்காந்துக்கொண்டு போவோர் வருவோருக்கெல்லாம் இலவசமாக தடுப்பூசி போட்டு கலக்கி கொண்டிருக்கிறார்.
உலகமே வியக்கும் இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டிய நம் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களுக்கும், அவரகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களை எல்லா வகையிலும் ஊக்குவித்து இதை செய்து காட்டிய மாண்புமிகு பாரத பிரதமர் மோதிஜி அவர்களுக்கும் நாம் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஜெய் ஹிந்த்.
No comments:
Post a Comment