Thursday, December 23, 2021

எனக்கு அரசியல்ஞானம் குறைவு !

 ஆனால் 'திருவாளர் பொதுமக்களைப்' பார்த்துக்கொண்டுதான் உள்ளேன்.

1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்குத் திருமணம் முடித்தவன் வீட்டில் இலவசக் #கலைஞர்_TV !
2. ஊருக்குள் 30 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொள்கிறான்!
3. தம்முடைய இரண்டு மகன்களும் அமெரிக்காவில் சம்பாதிக்கும் நிலையிலும், அனாதைப்பணம்
ரூ. 1000 பெறுகிறான் ஒருவன்!
4. பொங்கலுக்கு அரசால் தரப்படும் இலவசச்சேலையைக் காரில் சென்று பெறுகிறாள் ஒரு பெண்.
5. IT கம்பெனியில் லட்சத்தில் சம்பளம்; ஆனால், ரேஷன்கார்டுபடி தாலிக்குத் தங்கம் பெறுகிறான் இன்னொருவன்.
6. 5000 சதுரஅடியில் நீச்சல்குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி ரூ350 மட்டுமே; அதாவது 20 ஆண்டிற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது.
7. இது போக ரேசன் பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது;
மானிய சிலின்டர்களைக்
கார் பார்ட்டிகளுக்கு விற்பது.
8. பைனான்ஸ் மற்றும் சீட்டுகள் நடத்திப் பலகோடிகளில் புரளும் ஒருவன் #Income_Tax என்றால்
என்ன என்கிறான்.
9. சென்சஸ் எடுக்கப்போனோம்.
மாதவருமானம் 4000, 5000 என்றுதான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்போதுதான் சலுகைகள் கிடைக்குமாம்.
10. இதெல்லாமே என் தெருவில் நடக்கும் ஒருசில கூத்துகள்.
கடைசியாகக் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கிறார் 'திருவாளர் பொதுமக்கள்'.
1) முறையாக வரி செலுத்தி, சலுகைக்காகப் பொய் பேசாத மக்கள்.
2) ஊழல் இல்லாமல், மக்களுக்குச் சேவை செய்யும் அரசியல்வாதி.
3) லஞ்சம் வாங்காது கடமையைச் செவ்வனே செய்யும் அரசு ஊழியர்.
நாடு உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது?
எப்படித் திருத்துவது?
சட்டத்தின் வழியா?
சர்வாதிகாரமா?
கல்வி மூலமா?
எதைக்கொண்டு எதைத் திருத்துவது?
எனக்கு அரசியல் ஞானம் குறைவு.
எனவே நீங்களே விடை சொல்லுங்கள்.
நாடும் மக்களும் ந...ல்லா இருக்கட்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...