மூளை அறுவை சிகிச்சைக்குப்பிறகு பட்டி மன்ற மேடைக்குத்திரும்பியிருக்கும் பாரதிபாஸ்கர் அவர்களுக்கு
" தோத்திரம்" " தோத்திரம்"
" தோத்திரம்"
என்ன இப்படிச்சொல்கிறேனென்று கேட்க மாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
நீங்கள் நல்லபடியாக குணம் அடையவேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான உங்கள் நேயர்கள் பல வழிகளில் வேண்டிக்கொண்டார்கள். இந்துக்கள் கோவில்களில் வழிபாடு, முஸ்லீம்கள் மசூதிகளில் துவா, கிறித்துவர்கள் தேவாலயங்களில் பிராத்தனை செய்தார்கள். ஒன்று நீங்கள் நன்றி சொல்லாமலிருந்திருக்கணும் அல்லது எல்லோருக்கும் நன்றி என்று பொதுவாக சொல்லியிருக்கணும். ஆனால் கிறித்துவர்களுக்கு அதுவும் குறிப்பாக மோகன் லாசரஸ் செய்த பிரார்த்தனைக்கு நன்றி சொன்னீர்களாமே? அது என்னங்க அந்த மதவியாபாரிக்கு தனியாக நன்றி? அவர் பண உதவி செய்திருந்தால் அந்த உதவிக்குவ்நன்றி சொல்லுங்கள். ஆனால் அவர் பிரார்தனையால் மட்டும் குணம் அடைந்தது போல் பேசுவது மற்றவர்களின் பிராத்தனைகளை கொச்சைப் படுத்துவதாகாதா? அவர் என்ன டாக்டருடன் அருகிலிருந்து மூளை ஆபரேஷன் போது CD ஐ வைத்து குணப்படுத்தினாரா?
அட நீங்க நன்றி சொல்லுங்க சொல்லாட்டிப்போங்க. எத்தனையோ நன்றிகெட்டவர்கள் இருக்காங்க. அதில் நீங்க ஒன்று என்று இருந்துவிட்டு போகிறோம்.
ஆனால் மோடி சொன்னது போல் எனக்கு 15 லட்சம் கிடைத்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் இருந்திருக்காது என்றது ஏன்?
அப்போ நீங்களும் படிக்காத பாமரன் பேசுவது போல் பேசியிருக்கிறீர்கள்.
I think they have formated your brain erasing a all your knowledge and wisdom.
மோடி சொன்னது ஒரு ஒப்பீடு, அதாவது கருப்புப்பணத்தின் அளவு எவ்வளவு இருக்கும் என்று உங்களைக் கணக்குப்பார்த்துக் கொள்ள ஏதுவாக, அந்தபணத்தை வைத்து நாட்டில் ஒவ்வொருவருக்கும் 15 லட்சரூபாய் கணக்கில் போடுமளவிற்கு இருக்கிறது என்றுதானே சொன்னார். ஆனால் reading in between lines என்பார்களே, அதைத்தான் அன்று ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் செய்து பாமர மக்களின் மூளையில் ஏற்றிவிட்டன.
அதன் பிறகு எத்தனையோ பட்டிமன்றங்களில் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அப்போதெல்லாம் அந்த மகிழ்ச்சியை இந்த 15 லட்சத்தோடு ஒப்பிட்டுப் பேசாத நீங்கள், இப்போது பேசியதற்கு காரணமென்ன?
1. நீங்கள் மருத்துவமனையிலிருந்போது அதிமுக ஆட்சி...
இப்போது தி.மு.க ஆட்சி என்பதாலா?
2. தி.மு.கவின் official spokes person ஆகவாகிவிட்டீர்களா?
3. அல்லது சும்மா சன் டி.வி மேடையில் இப்படிப்பேசினால் உடன் பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்களென்று போகிறபோக்கில் பேசினீர்களா?
எதுவாக இருந்தாலும் உண்மைக்குப் புறம்பாக ஒரு பட்டிமன்றத்தில் பேசி எங்களைப் போன்ற பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மதிப்பை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்துவிட்டீர்கள்.
உங்களுக்கு இப்பவும் உங்களது பழைய படிப்பறிவு இருக்குமானால் இதற்கு விளக்கம் கொடுங்கள்.
இல்லாவிட்டால் படிப்பறிவில்லாத பாமரன் உளறியதென்று இதையும் கடந்து செல்வோம்.
ஆனால் இனி உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. விரைவில் மோகன் லாசரஸ் தனது கூட்டங்களில் " நம் பிரார்த்தனையால் குணமடைந்த பாரதி பாஸ்கர்" என்று உங்களைக் காட்சிப்பொருளாக நிறுத்தினாலும் ஆச்சர்யமில்லை.
டி.வி விளம்பரங்களில் " எனக்கு ரொம்ப நாளாக இந்த வியாதி இருந்தது. இதைத் தடவினேன். இப்ப ஓடுறேன், குதிக்கிறேன்" என்று வருமே, அதைக் கடந்து செல்வதுபோல் இதையும் கடந்து செல்வோம்.
மொத்தத்தில் " பாரதி பாஸ்கர்" என்னும் ஒரு தலை சிறந்த பேச்சாளாராக இனி எங்களால் உங்களை காணமுடியாது.
உங்கள் மனம் புண் பட்டால் என்னை மன்னிக்கவும்.
ஆனால் கோடிக்கணக்கான இந்துக்கள்,
மனம் புண்பட்டிருக்கிறதே! அதற்கு என்ன மருந்து?
வருத்தத்துடன்.
No comments:
Post a Comment