ஏற்றுமதியாளர்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி., மண்டல தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி, நேற்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
நிலுவை தொகை
சென்னையில் உள்ள இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கமிஷன் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய திருப்புத் தொகை நீண்ட காலமாக கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
தவறான முறையில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்தல், ஐ.ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி சலுகை ஆகியவற்றின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் திருப்புத் தொகை நிலுவையில் உள்ளது. இதனால், தமிழகத்தில் மட்டும், 360க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.விளக்கம் ஏற்றுமதி கொள்கை தொடர்பான பிரச்னைகள், ஜி.எஸ்.டி., மற்றும் சுங்கத்துறை தொடர்புடைய பல்வேறு பிரச்னைகளுக்கு, கமிஷனர் விளக்கம் அளித்தார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு திருப்புத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கமிஷன் அலுவலக துணை இயக்குனர் ஜெனரல் உன்னிகிருஷ்ணன், தென்மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment