Wednesday, December 22, 2021

திமுக மற்றும் அதன் சார்ந்த தோழர்கள் அனைவரும் தேசத் துரோகிகளின் சங்கமம்.

 கிட்டத்தட்ட 22 வயது வரை நான் ஒரு நாத்திகனாக இருந்தேன். நான் கோவில்களுக்கு செல்ல விரும்பியதில்லை.

'கோவில்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்கள்' என கருதினேன்.
*
நான் ஒருமுறை குர்கானில் உள்ள 'ஷீட்லா மாதா' மந்திருக்கு சென்றிருந்தேன்.
கோவிலுள்ளே ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் பணம் கேட்டதை நான் வெறுத்தேன்.
கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு பூசாரி உன் சம்மதமில்லாமல் உன் நெற்றியில் திலகமிட்டு 10 ரூபாய் கேட்பார்.
யாரோ உன் நெற்றியில் மயிலிறகால் அடித்துவிட்டு இன்னொரு 10 ரூபாய் கேட்பார்.
பிறகு இன்னொரு திலக், சாம்பலுடன்... இன்னொரு 10 ரூபாய்...
என் அம்மா மூடநம்பிக்கை கொண்டவர். அந்த பணத்தை சந்தோஷமாக செலவழிப்பார்.
ஆனால் நான் வெறுப்பாக உணர்ந்தேன். கோயில்களிலிருந்தும் கடவுள் நம்பிக்கையிலிருந்தும் இது போன்ற விஷயங்கள் என்னை ஒதுங்க செய்தன.
'இதுவே நான் செல்லும் கடைசி கோயில்' என்று முடிவெடுத்தேன்.
*
பிறகு நான் வளர்ந்தேன்.
அரசியலை பின்பற்ற ஆரம்பித்தேன்.
அப்போது, ஒரு செய்திக் கட்டுரை பார்த்தேன்.
'ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர் அறிவிப்பின்படி,
''#இமாம்களின் சம்பளம் மாதம் ரூ.10,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும். உதவியாளர்களின் ஊதியம் மாதம் 9,000 லிருந்து 16,000 ஆக உயர்த்தப்படும்.
டெல்லி வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் தேசிய தலைநகரில் உள்ள 185 மசூதிகளுக்கும் இது குறித்த முடிவு பொருந்தும்.''
மசூதிகளில் வாழும் மௌலவிக்கள், மௌலானாக்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு #மாத_சம்பளம் வழங்கப்பட்டதை உணர்ந்தேன்.
*
பெரும்பாலான கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
அதே நேரத்தில் தேவாலயத்தில் வசிக்கும் அருட்தந்தையர்கள் & மற்ற ஊழியர்களுக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
அவர்களும் அவர்களுக்கு கொடுத்த சம்பள பணத்தை நம்பித்தான் ஊழியம் செய்தார்கள்.
*
நான் அதிர்ச்சி அடைந்தேன்.
என்னை கோவில்களை விட்டு விலக்கிய நிகழ்வுகள் எல்லாம் வெடித்து சிதறியது.
பூசாரிகள் எந்த தவறும் செய்யவில்லை.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள்.
வழிபாட்டுத் தலங்களை கவனித்து வந்தவர்கள், நம் தெய்வங்களின் சிலைகளை நீராட்டி, அலங்கரித்து சேவை செய்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல் ஆக்கப்பட்டார்கள்.
*
என் மனதில் தோன்றிய அடுத்த கேள்வி,
'இந்நிலைக்கான காரணம் என்ன?'
நான் மேலும் கூர்ந்து கவனித்ததில் பதில்,
#அரசியல் - என்று புரிந்தது.
இந்து மதத்தை வளர்க்க ஆளும் கட்சி ஒருபோதும் விரும்பவில்லை.
அவர்கள் மற்ற மதங்களை ஊக்குவிக்க விரும்பினார்கள்.
"கடந்த 70 ஆண்டுகளில், ஏன் ராம் மந்திர் கட்டப்படவில்லை?" என்ற கேள்விக்கு அது எனக்கு ஒரு பதிலைத் தந்தது.
அவர்கள் அதை கட்ட விரும்பவில்லை.
*
காதலின் சின்னமாக #தாஜ்மஹால் புகழப்பட்டதற்கும் அதுதான் காரணம்.
ஷாஜஹான் மனைவி மும்தாஜ், 14வது குழந்தையை பெற்றபோது உடல் நலம் குன்றி இறந்தார். அவருக்காக கணவர் ஷாஜஹான் கட்டிய சமாதிதான் தாஜ்மஹால்.
நமது பாட புத்தகங்களில் முக்கிய இடத்தையும், உலக அளவில் பிரபல்யத்தையும் பெற்றுள்ளது.
ஆனால்,
#தசரத்_மஞ்சியின் முயற்சிகள் குறித்து, நமது வரலாற்றுப் புத்தகங்களில் எந்தக் குறிப்பும் இல்லை.
தசரத் மஞ்ஜியின் மனைவி, பிரசவ நேரத்தில் உடனடியாக மருத்துவமனை செல்ல முடியாததால் மரணமடைந்தார்.
காரணம், அவர்கள் வசித்த கிராமத்திலிருந்து மருத்துவமனை செல்ல சாலை வசதி இன்றி ஒரு பெரிய மலை குறுக்கே இருந்தது. அதனை சுற்றி செல்வதற்குள் மஞ்சியின் மனைவி இறந்தார்.
🚩 சாலை வசதி இன்றி இனி மற்றொரு உயிர் போகக்கூடாது என்று முடிவெடுத்த தசரத் மஞ்ஜி, தனி ஒருவனாக 22 வருட கடின உழைப்பால் மலையை வெட்டி, சாலை போட்டவன்.🙏🙏
*
இப்போது மத்தியில், இந்து மதத்தை வளர்க்க நினைக்கும் ஒரு கட்சி ஆட்சியில் உள்ளது.
👉 அவர்களை, இந்துக்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை.
👉 அதனால்தான் கெஜ்ரிவால் போன்றவர்கள், மௌல்விக்களின் சம்பளத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள். ஆனால் கோவில்கள் தேவை என்று பார்ப்பதில்லை.
இந்துக்களாகிய நாங்கள் மதம் பார்த்து வாக்களிப்பதில்லை.
*
ஒரு இந்து மதகுரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த PIL படி:
👉 மனுத்தாக்கல் செய்யும்போது நரசிம்ம கோபாலன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக வாங்கும் 250 ரூபாயில் மூன்று மடங்கு உயர்வு பெற்று மாத ஊதியம் 750 ரூபாயை வாங்குகிறார்.
👉 கோவிலில் மற்ற 6 முழு நேர சேவை பணியாளர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவரும் இதைபோல் மூன்று மடங்கு சம்பளம் பெறுகின்றனர்.
👉 பத்தமடையில் உள்ள வில்வநாதர் கோவிலில் பூசாரி ஒருவருக்கு மாதம் 19 ரூபாய் சம்பளம்.
👉 பிரம்மதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான கைலாசநாதர் கோவிலில் பூசாரிக்கு 215 ரூபாய் சம்பளம்.
*
நமது கோவில்களில் அர்ச்சகர்களின் நிலை... #ஏழ்மை.
உண்மையில் ஏழை.
இவர்களை பிச்சைக்காரர்கள் போல் ஆக்கியது யார்?
*
🚩 இப்ப ரொம்ப பெருமையா கோவிலுக்கு போறேன்.
🚩 என்னால் முடிந்த அளவு தானம் செய்கிறேன்.
🚩 நமது தெய்வங்களுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நமது மரபை பேணுபவர்களுக்கு நன்றி செலுத்தும் பங்களிப்பாகவே இதை நான் கருதுகிறேன்.
அடுத்த முறை நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது பூஜாரிகள் பணம் கேட்டால் அவர்களை வெறுக்காதீர்கள். 🙏
அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். குற்றவாளி அல்ல.
மலிவான அரசியலுக்கு இவர்கள் பலிகடா.
*
👉 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதையும்,
👉 ''பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை''
- என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டுகிறேன்.
May be an image of 1 person, standing, temple and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...