ஒரு வீட்டில் வயதான தம்பதியர் வசித்து வந்தனர்.
ஒரு நாள் இரவில் தன்னீர் குடிக்க எழுந்த மனைவி தன் வயதான கனவனை எழுப்பி "என்னங்க இங்க பாருங்க இப்ப நான் ஜன்னல் வழியாக பார்த்தப்ப கார் ஷெட்ல லைட் எரிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. அதை போய் ஆஃப் செஞ்சுட்டுவாங்களேன்" என்று சொன்னாள்.
பாவம் அந்த மனுசனும் கஷ்டப்பட்டு கட்டிலில் இருந்து இறங்கி முனகிக்கொண்டே வாசல் கதவும் திறந்து வெளியில் வந்து பார்த்தா ஒரு ஐந்தாறு பேர்கள் கார்ஷெட் கதவை உடைச்சுன்டு இருக்கறதை பார்க்கின்றார். உடன் வீட்டுக்குள் வந்து பக்கத்திலிருக்கும் காவல் நிலையத்த கூப்பிட்டு
"ஐயா "
வீட்டு அட்ரஸ்சை சொல்லி
"எழுதிக்கிடுங்கய்யா. இங்க நாங்க வயசான புருஷன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கோங்கய்யா ஒரு ஐந்தாறு திருட்டு பயலுக எங்க வீட்டு கார் ஷெட் கதவை உடைச்சிட்டு இருக்காங்கய்யா. உடனே ஒரு போலீஸ் டீமை அனுப்புங்கய்யா " என்று தகவல் கொடுத்தார்.
அந்தப் பக்கம் போனை எடுத்த ஆளு
"நாங்க உங்க வீட்டு விலாசத்த எழுதிக்கிட்டோம் கவலைப்படாதீங்க இப்ப இங்க யாரும் Free ஆ இல்லை. யாராவது வந்தவுடனே அவங்களை உங்க வீட்டுக்கு அனுப்பறோம்"
அப்படீன்னு சொன்னதை கேட்டு அந்த தம்பதியரோ மிகவும் கவலை அடைந்தனர். அந்த திருடனுங்களும் கார்ஷெட் கதவை விடாம உடைச்சுக்கிட்டே இருந்தாங்க.
ஒரு இரண்டு நிமிஷம் கழித்து பெரியவர் மீண்டும் காவல் நிலயத்துக்கு போன் போட்டு
"ஐயா கொஞ்சம் கவனிங்க. இப்ப போலீஸ் யாரையும் அனுப்பவேண்டாம். அந்த ஐந்துபேரையும் நான் துப்பாக்கியால சுட்டு கொண்ணுட்டேன்" னு சொல்லி போனை வைச்சுட்டாரு
இந்த போனைக் கேட்டவுடனே போலீஸ் ஸ்டேசன்ல ஒரே பரபரப்பா இருந்துச்சு.
ஒரு அஞ்சு நிமிஷத்துல ஒரு பெரிய போலீஸ் படை ரெண்டு ஆம்புலன்ஸ் மூனு டாக்ட்டர்கள் சகிதமா ஒரு ஹெலிகாப்டர்ல வந்து இறங்கினாங்க.
அந்த அஞ்சு திருடங்களையும் மடக்கிபிடிச்சு கைது பண்ணினாங்க
அப்புறம் அந்த போலீஸ் படையோட தலைமை அதிகாரி அந்த பெரியவரிடம் வந்து "ஆமா நீங்க அத்தனை பேரையும் சுட்டுப்புட்டேன்னு சொன்னீங்களே. நாங்க அவங்களை உயிரோடன்னா பிடிச்சுருக்கோம்" அப்படின்னு கேக்கறார். நம்ம பெரியவர் உடனே " நீங்களுந்தான் இப்ப ஸ்டேஷன்ல ஒருத்தர் கூட இல்லேன்னு சொன்னீங்க" ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க
Do not underestimate Senior Citizens
No comments:
Post a Comment