மடப்புரம் பத்ரகாளி
மதுரையை ஆண்டு வந்த அன்னை மீனாட்சி, பிரளயத்தால் தன் நாடும் மூழ்கியது கண்டு வருந்தி, தன் நாட்டை அடையாளம் காட்டும்படி இறைவனைக் கேட்டாள். ஆதிசேஷன் கடலிலிருந்து வெளி ப்பட்டு மதுரையின் எல்லைகளை தன் உடலால் வளைத்துக் காட்டினார். அப்படி பாம்பின் படமும் வாலும் இணைந்த இடமே படப்புரம் என்றழைக்கப்பட்டு, நாளடைவில் மடப்புரமாகி விட்டது. மும் மூர்த்திகள் பார்வதியையும் அவருக்குத் துணையாக அய்யனாரையும் அமர்த்திவிட்டு வேட்டையாடச் சென்றனர். பார்வதி காளியாக மாறி இங்கு நிலை கொண்டாள். செஞ்சடையும் கருத்த திருமேனியும் செண்டு தரித்த கையோடும் உக்கிரமாக அருள்பாலிக்கிறாள். பத்ரகாளியின் சிரசிலிருந்து சுமார் பதினைந்து அடி உயரத்தில் ஆர்ப்பரிக்கும் பாவத்துடன் குதிரை காணப்படுகிறது. அதன் கால் குளம்பு கள் இரு வீரர்களின் தலை மீது பதிந்திருக்கிறது. அம்மனுக்கு முக்கிய நிவேதனம் எலுமிச்சைக் களி பொங்கல். பக்தர்கள் எலுமிச்சை மாலை சாத்துகிறார்கள். எந்த பிரச்னையும் அன்னையிடம் வேண்டிக்கொண்டு தம் வீட்டிற்கு போகும் முன்பே தீருவதை நெடுநாட்களாக பக்தர்கள் அனுபவிக்கிறார்கள். மதுரை-மானா மதுரை சாலையில் 25 கி.மீ. தொலைவில் அன்னை கோயில் கொண்டிருக் கிறாள்.
காளியம்மன் 108 போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
ஓம் அகநாசினியே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
ஓம் இளங்காளியே போற்றி
ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
ஓம் இஷ்டதேவதையே போற்றி
ஓம் இடர் களைபவளே போற்றி
ஓம் ஈறிலாளே போற்றி
ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
ஓம் உக்ரகாளியே போற்றி
ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
ஓம் ஊழிசக்தியே போற்றி
ஓம் எழுதலைக்காளியே போற்றி
ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கருங்காளியே போற்றி
ஓம் காருண்யதேவியே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கல்யாணியே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் காளராத்ரியே போற்றி
ஓம் காலபத்னியே போற்றி
ஓம் குங்குமகாளியே போற்றி
ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
ஓம் சமரில் வெல்பவளே போற்றி
ஓம் சத்திய தேவதையே போற்றி
ஓம் சம்ஹார காளியே போற்றி
ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
ஓம் சுடலைக்காளியே போற்றி
ஓம் சுந்தர மாகாளியே போற்றி
ஓம் சூலம் கொண்டவளே போற்றி
ஓம் செங்காளியே போற்றி
ஓம் செல்வம் தருபவளே போற்றி
ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
ஓம் சோமகாளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தனகாளியே போற்றி
ஓம் தட்சிணகாளியே போற்றி
ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
ஓம் தாண்டவமாடினாய் போற்றி
ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் தில்லைக்காளியே போற்றி
ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
ஓம் தீயவர் பகைவியே போற்றி
ஓம் நல்லவர் துணைவியே போற்றி
ஓம் நலன்கள் தருவாய் போற்றி
ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
ஓம் நாடாளும் தேவியே போற்றி
ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
ஓம் நித்தியகாளியே போற்றி
ஓம் நிக்ரஹ காளியே போற்றி
ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
ஓம் பராசக்தி தாயே போற்றி
ஓம் பஞ்சகாளியே போற்றி
ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் பயங்கரவடிவே போற்றி
ஓம் பத்ரகாளியே போற்றி
ஓம் பாதாளகாளியே போற்றி
ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் பூதகாளியே போற்றி
ஓம் பூவாடைக்காரியே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பெருங்கண்ணியே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மடப்புரத்தாளே போற்றி
ஓம் மகாகாளியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மங்களரூபியே போற்றி
ஓம் மந்திரத்தாயே போற்றி
ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
ஓம் மாற்றம் தருவாய் போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் மோட்சம் தருவாய் போற்றி
ஓம் வளம் தரும் தேவியே போற்றி
ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
ஓம் விரிசடையாளே போற்றி
ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
ஓம் வீரபத்ரகாளியே போற்றி
ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
ஓம் வெக்காளியே போற்றி
ஓம் வேதனை களைவாய் போற்றி
ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி
எத்தகைய தீமைகளையும் அழிக்கும் சக்திவாய்ந்த தெய்வமான காளியம்மனை போற்றும் 108 போற்றி துதி இது. இந்த துதியை தினமும் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் துதிப்பது நல்லது. எல்லா அம்மன் தெய்வங்களை வழிபடும் தினமான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி, இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். வீட்டில் மற்றும் உங்களின் உடலில் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும்.
No comments:
Post a Comment