எனது மனைவியின் மறைவின் போது,
யார்.. யாரோ வந்தார்கள், எனக்கு அழ தோன்றவில்லை.
சிவாஜி என்னை பார்க்க வந்த பொழுது,
அப்போது தான் என்னை புரிந்து கொண்டு நான் அழுதேன். அந்த உணர்வு எங்களிடம் இருந்தது.
யார் யாரோ பிடித்து பேசிக் கொண்டிருந்தார்கள்,
ஆனால் நான் அந்த இடத்தில் எனது உணர்ச்சியை, உணர்வை வெளிப்படுத்த முடியாமல் இருந்த பொழுது, சிவாஜியிடம் பீறிட்டு அழுததற்கு பிறகு தான், என்னால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது.
மனிதனுக்கு துன்பம் ஏற்படும் நேரத்தில் தான் நண்பன் சகோதரனாகவோ, உறவினராகவோ தெரிவான்...
அன்று மாலை 5.30 மணி வரையில் என்னோடு இருந்து, மயானத்திற்கு வந்து, என்னை குளிப்பாட்ட வைப்பதற்கு கூட இருந்து, என்னை, ஒரு துளி அளவு உணவை சாப்பிட வைத்த பிறகு தான் சிவாஜி சாப்பிட்டார்.
அப்படி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
அவர் துக்கம் விசாரித்து விட்டு போயிருக்கலாம், யாரும் கேட்க முடியாது,
என்னை இறுதிவரை மயங்கி விழாமல் என்னை தாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்து எனக்கு உதவி செய்தவர். எனது தம்பி சிவாஜி....
எம்.ஜி.ஆர் அவர்கள்.
டாக்டர் பட்டம் கொடுத்த போது,
நடந்த பாராட்டு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களை பற்றி மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியது.
No comments:
Post a Comment