தப்லீக் ஜமாத்தை பற்றிய அடிப்படை உண்மைகளை மாரிதாசுக்கு மேல் வெளுத்து வாங்கிய நீதிமன்றம்.
மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்யும் போதான உத்தரவில் நீதிபதி அவர்கள் கூறும்போது....
"சர்வதேச தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை #தாக்குவதற்கு எளிதான ஒரு இலக்காக பார்ப்பதை யாராலும் மறுக்க முடியாது.
மதத்தின் பெயரால் பலர் தவறாக வழிநடத்தப்பட்டு #தீவிரவாதிகளாக மாற்றப்படுது உண்மையே. #தீவிரவாதம் எந்த வடிவத்திலும் வரலாம். பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது அது, #உயிரி_ஆயுதத்தின் (Bio-warfare) மற்றொரு வடிவமாகவே பார்க்கப்பட்டது.
அதுதொடர்பான செய்திகள் மைய நீரோட்ட ஊடகத்திலேயே வெளியிடப்பட்டது. ஆகவே, இந்த விவகாரத்தில் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய மாரிதாசை குறை சொல்ல முடியாது" என்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் "ஒரு #அமைப்பை விமர்சிப்பதை மதத்தை விமர்சிப்பதாக கருத முடியாது.
தப்லிக் ஜமாத் அமைப்பும் இஸ்லாமும் ஒன்றுதான் என்று கூற முடியாது. 2020 மார்ச் மாதத்தில், தனது #பொறுப்பற்ற_செயல் காரணமாக தப்லிக் ஜமாத் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதை யாராலும் மறுக்க முடியாது.
அதன் (தப்லிக் ஜமாத்) தூய்மைவாத மற்றும் மீட்டுருவாக்க திட்டப் பெயரிலான #இஸ்லாமிய_தீவிரபோக்கிற்கு இடமளிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதுபோன்ற காரணங்களுக்காகவே சமீபத்தில் சவுதி அரேபிய அரசாங்கமே அந்த அமைப்பை (தப்லிக் ஜமாத்) #தீவிரவாத_இயக்கம் என்று கூறி #தடை செய்துள்ளது" என்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீது பதியப்பட்ட வழக்கை #ரத்து செய்வதாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் வாயிலாக தப்லீக் ஜமாத்தின் தீவிர தன்மை குறித்து தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டி ஒரு #குட்டு வைத்துள்ளது நீதிமன்றம்.
No comments:
Post a Comment