Wednesday, March 23, 2022

சொல்கிறேன் கேளுங்கள்.

 கரும்பு விவசாயிகளுக்கு நேற்றைய தமிழக அரசின் வேளான் பட்ஜெட்டில் டன்னிற்கு-₹195 ரூபாய் ஊக்கத்தொகை தமிழக அரசு அறிவிப்பு.

ஆகா! ஓகோ அருமை, என வழக்கம்போல் தமிழக ஊடகங்கள்.
ஆனால் உண்மை நிலை என்ன?
இன்றைய விலைப்படி தமிழகத்தில் ஒரு டன் கரும்பின் விலை-₹2,950.
உத்திர பிரதேசத்தில்-₹3,500.
சட்டீஸ்கரில்-₹3,550.
மான்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் தேர்தல் அறிக்கையில் கரும்பு ஒரு டன்னிற்கு விவசாயிகளுக்கு ₹4000 விலை நிர்ணயிக்கப்படும் என அறிவித்தார்.
ஆனால், அதையும் தராமல் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிகவும் குறைவாக விலை நிர்ணயம் செய்திருப்பது. விவசாயிகள் மத்தியில் ஏமாற்றம் அளிக்கிறது.
அதுசரி நீங்கள் கேட்கலாம். நம் ஊர் கரும்பை உ.பி யிலோ, சட்டீஸ்கரிலோ கொண்டு போய் விற்கலாமே என்று.
ஆனால் முடியாது. காரணம் நம் சட்டம் அப்படி.
ஒவ்வொரு விவசாயியும் தன் பகுதியில் இருக்கும் ஒரு Monopoly கரும்பு ஆலைக்கு மட்டுமே கரும்பை விற்க முடியும். அதன் பெயர் *Cane reserved area* சுமார் 40Km க்குள். அதற்கு மேல் கொண்டு செல்ல விவசாயிகளுக்கு அனுமதி இல்லை.
அதற்குத்தான் வேளான் சட்டம் ஆனால் அதையும் ரத்து செய்தாயிற்று.
சரி சும்மா விவசாயிகளுக்கு எப்படி அரசாங்கம் அல்லது ஆலை பணம் கொடுக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
ஒரு உண்மையை சொல்லவா.
இன்றைய தமிழக அரசை நடத்துவதே கரும்பு விவசாயிகள்தான்.
நம்ப முடியவில்லையா.
சொல்கிறேன் கேளுங்கள்.
இன்று, தமிழக அரசின் விலைப்படி ஒரு டன் கரும்பின் விலை ரூ.2,950. வெட்டுக்கூலி போக ஒரு 2000 விவசாயிக்கு கிடைக்கும். அதுவும் ஒரு வருடத்தில்.
ஆனால் அதிலிருந்து
ஆலைகள்.சுமார் ஒருடன் கரும்பிலிருந்து
95Kg's சர்க்கரை மற்றும் 21.75 Kg எத்தனால் மொலாசஸ் மூலம் கிடைக்கும்.
சக்கையிலிருந்து எடுக்கப்படும் காகிதம் மற்றும் மின்சாரம். அது தனி வருமானம்.
இது கரும்பு ஒரு டன்னிலிருந்து ஆலைக்கு கிடைக்கும் வருமானம்.
சர்க்கரை -₹3,800.
Ethanol-₹6000
மொத்தம்-₹9,800.
மின்சாரம், காகிதம் சேர்க்காமல்.
இந்த எத்தனாலை மது ஆலைகள் வாங்கி Distiller செய்து ஆல்கஹாலாக மாற்றி விற்கிறார்கள்.
சாதாரண மது வகைகளில் 45.5% மட்டுமே ஆல்கஹால் மீதம் இருப்பது தண்ணீர் மற்றும் Incredients.
ஆக. ஒரு Quarter 250ML எனில் அதில் வெறும் 80-100ML ஆல்கஹால் உள்ளது.
ஆக ஒரு டன் கரும்பிலிருந்ந்து 21.75 முதல் 84 லிட்டர் ஆல்கஹால் கிடைக்கிறது.
அதை குறைந்தபட்சம் 200 குவாட்டராக மாற்றி விற்கின்றனர்.
அதில் குறைந்தபட்சம் ஒரு டன்னிலிருந்து கிடைக்கும் ஆல்கஹாலை மதுவாக்கி சுமார் ₹40,000 க்கு மேல்
தமிழக அரசு விற்கிறது.
இதில் வரியை சேர்க்கவில்லை.
இப்போது தமிழக அரசு TASMAC மதுக்கடை வருமானமே பிரதான வருமானம். அதற்கான மூலப்பொருள் கொடுப்பது கரும்புவிவசாயிகள் தானே.
அப்படியெனில் கரும்புவிவசாயிகளால்தானே அரசாங்கம் நடக்கிறது.
ஆக மதுவிற்பனையால் ஆண்டிற்கு 30,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தமிழக அரசும், மதுஆலைகளை மற்றும் பார்களை நடத்தும் அரசியல் வாதிகளும். கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை கொடுக்க முன்வர வேண்டும்.
மற்ற மாநிலங்களிலைவிட தமிழகம் முதல் மாநிலம் எனக் கூறும் தமிழக முதல்வர்.
கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கொடுப்பதிலும் முதலாவதாக இருக்க வேண்டாமா?🙁🙁🙁🙁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...