மீன் வாங்கும் கடையில்....
ஒருவர், இரண்டு பெரிய வாளை மீன்களை சுத்தம் செய்வதற்கு கொடுத்துவிட்டு நின்று கொண்டு இருந்தார்....அருகில் நான் நின்று கொண்டிருந்தேன்....
" எம்மா.....இந்த வாள மீனு மேல கொழ கொழன்னு இருக்க ரதெல்லாம் நல்லா சொரண்டி எடுத்துடு.... ம்மா"
"ஏன்னா அத்த எடுக்கச் சொல்ற" என்று மீன் சுத்தம் செய்யும் அந்த அம்மா கேட்க...
" வாள மீனும் கோலா மீனும் கொழம்ப நீர்த்து போவ வச்சுடுது...அதான் சொல்றேன்" என்றார்.
உடனே சத்தமாக சிரித்த அந்த பெண்மணி, " ஏய் இங்கார்டி... வாளையும் கோலாவும் குழம்ப நீர்த்துப் போவ வச்சுடுமா ன்டி....அண்ணஞ் சொல்றாரு... கேட்டுக்குடி." என்று அவருடன் இருக்கும் மற்றொரு பெண்மணியிடம் கிண்டலாகக் கூறினார்.
"ஏன் இல்லையா..." என்று அவர் குழம்பியபடி கேட்க....
" எண்ணா....இதுல மேல இருக்க கொழகொழப்பு தான் சுண்ணாம்பு சத்து...என்னோட மருமவ..நான் கொஞ்சம் அழுத்தி தேச்சி கழுவினா கூட கத்துவா ..லேசாதான் அலசனும்...அந்த சுண்ணாம்பு சத்துதான் நமக்கு நல்லது....சும்மா கையி வலி காலு வலின்னு, சோவையும் சொத்தையுமா திரியுதுங்க இப்போ இருக்க புள்ளிங்க.... இத்த வாங்கி குடுங்க...எல்லாம் சரியா பூடும்....." என்று ஒரு கட்டுரையே படித்துவிட்டார்.
" அப்படியா....ஆமாமா சுண்ணாம்பு சத்து உடம்புக்கு ரொம்ப நல்லது ம்மா.." என்று என்னைப் பார்த்துக் கூறினார்.
" எலும்பு வலுவாகும்....முதுகு வலி வராது தெரியுமா.." என்று என்னிடம் கூறினார். நான் தலையாட்டினேன்.
" எங்க இதுங்க எப்போ பாரு கோழிக் கறி கேக்குதுங்க....இந்த மீன், நண்டு, ஏறா லாம்தான் இரத்தத்துல கால்சியம் சத்து தரும்....அதத்தான் ரேடியோவில் கூட சொல்லுறாங்க இல்ல...."
நீயும் வாங்கிகும்மா...கால்சியம் சத்து நெறய இருக்கு வாள மீனுல..உடம்புக்கு நல்லது.."
சரிங்க என்று சிரித்துக் கொண்டே சென்று விட்டேன்.....
No comments:
Post a Comment