Tuesday, March 22, 2022

இன்று ம.தி.மு.க., பொதுக்குழு; அதிருப்தி நிர்வாகிகள் நீக்கம்?

 ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோவுக்கு எதிராக செயல்படும் மூத்த மாவட்ட செயலர்கள் உட்பட, 20க்கும் மேற்பட்ட அதிருப்தி நிர்வாகிகள், இன்று(மார்ச் 23) கூடும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் கூறின.


ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை அண்ணாநகரில் கூடுகிறது. துணை பொதுச் செயலர்களாக ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், தலைமை நிலைய செயலராக துரை வைகோ, தணிக்கை குழு உறுப்பினராக சுப்பையா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

துரைக்கு ஆதரவாளர்களாக உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மட்டும் பொதுக்குழுவில் பேச அனுமதிக்கப்பட உள்ளனர். தலைமை நிலைய செயலர் பதவியை துரைக்கு வழங்க, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news



சிவகங்கை மாவட்டச் செயலர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலர் சண்முகசுந்தரம் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் என, 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

'சட்டத்திற்கு உட்பட்டு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். ம.தி.மு.க.,வில் எந்த உழைப்பும் தராத, தியாகம் செய்யாத துரையை கட்சியில் சேர்த்து, உயர்பதவி கொடுப்பதை நாங்கள் ஏற்கவில்லை' என்ற கோஷத்தை மூத்த நிர்வாகிகள் எழுப்பி உள்ளனர்.

'இன்றைய பொதுக்குழுவில், அவர்கள் அனைவரையும், கட்சி பதவிகள் மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, துரை வலியுறுத்தியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...