முதல்வர் ஸ்டாலின் அரசு பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பயணத்தில், ஆறு நிறுவனங்கள், 6,100 ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் பின்னணியில், முதல்வரின் மருமகன் சபரீசன் முக்கிய பங்காற்றி உள்ளார். இதை முன்னதாகவே மத்திய உளவுத் துறை அறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, முதல்வரின் பயணம் முழுவதையும், மத்திய உளவுத் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கண்காணித்துள்ளனர்.
மத்திய உளவுத் துறை அலுவலர்கள், துபாய் மற்றும் அபுதாபிக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த விபரங்களை சேகரித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். பணப் பரிமாற்ற விஷயங்கள் எதுவும் நடந்ததா என்பது குறித்து, அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ளது. அமலாக்கத் துறை அறிக்கை அளித்தால், அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கலாம் என்கிறது டில்லி வட்டாரம்.
அதேபோல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், தனக்குரிய வழிகளில், முதல்வர் பயணம் தொடர்பாக, சில தகவல்களை திரட்டி உள்ளார். கவர்னர் ரவியிடம் அவற்றை வழங்க, அவர் திட்டமிட்டுள்ளாராம்.
No comments:
Post a Comment