நானும் என் மகனும் காரில் பிரப்ரோடில், செங்குந்தர் பள்ளி அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தோம்.
எங்கள் காருக்கு முன்னால்
20 வயது இளைஞர் ஒருவர்
Two Wheelerல் போய் கொண்டிருந்தார்.
தீடிரென்று அவரிடம் இருந்த பை அறுந்து பையில் இருந்த காய்கறிகள், கீரை கட்டுகள், தக்காளி எல்லாம் சிதறி ரோடு முழுவதும் பரவியது.
காரில் அவர் பின்னால் சென்று கொண்டிருந்த நாங்கள் சட்டென்று
காரை நிறுத்தி விட்டோம்.
இளைஞர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார்.
எங்கள் காரில் இருந்த Cotton பை ஒன்றை எடுத்துக் கொண்டு, நான் சட்டென்று காரை விட்டு இறங்கினேன்.
அந்த இளைஞரை நெருங்குவதற்குள், அந்த ரோடில் சென்று கொண்டிருந்த ஏழு எட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஓடோடி வந்தார்கள்.
சட்டென்று ரோடில் கிடந்த காய்கறிகளை வேகமாக எடுக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு இளம் பெண், டிராபிக் கான்ஸ்டபிகளாக மாறி, போக்குவரத்தை ஒழுங்கு செய்தார்.
இன்னொரு பெண் கொடுங்க
என்று என்னிடமிருந்த பையை வாங்கி மளமளவென்று பொறுக்கின காய்கறிகளை பையில் போட்டார்.
ஒரு தக்காளி பழம் கூடwaste
ஆகவில்லை. எல்லாம் பையில்.
அந்த இளைஞரிடம் பையை கொடுத்து விட்டு, எல்லோரும் அவருக்கு Bye சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.
5 நிமிடம் கூட இல்லை.
எல்லாம் முடிந்துவிட்டது.
இளைய தலைமுறையின் வேகமும், உதவும் மனப்பான்மையும், தன்னலமற்ற மனமும் வியக்க வைத்தது.
புதிய இந்தியா சிறப்பாக மலரும்.
மதவாதிகளும், அரசியல்வாதிகளும் தான் நஞ்சை கக்கி கொண்டிருக்கிறார்கள்.
இனி வரும் இளைய சமுதாயம் இந்த அசுரர்கள் பிடியில் சிக்காமல், தெளிவான சிந்தனையோடு, இலக்கு நோக்கி பயணித்தால், இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும்.
No comments:
Post a Comment