இந்தியா தவறுதலாக
BrahMos 3 Mach Speed கொண்ட ஒரு ஏவுகணையை பாகிஸ்தான் பக்கம் Su,-29 ல் இருந்து செலுத்திவிட்டது. அது பாகிஸ்தானுக்குள் 124 கிமீ தூரம் 7 நிமிடம் பயணித்து, கிட்டத்தட்ட அதன் தலை நகரை எல்லாம் கடந்து குறுக்கே முழுதும் பயணித்து மேற்கு எல்லையில் ஒரு வெட்ட வெளியில் விழுந்தது. அதில் எந்த வெடிபொருளும் இல்லாததாலும், விழுந்த இடத்தில் எந்த கட்டிடங்களோ, மனிதரோ இல்லாததால், உயிர், பொருள் சேதம் எதுவும் இல்லை.
அதை பாகிஸ்தான் கண்டுபிடித்து இந்தியாவில் இருந்து வந்ததாக சொன்னது. இந்தியாவும், 2 நாட்களுக்கு பிறகு ஆம் தவறுதலாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்துவிட்டது. ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம் (இங்கே முக்கியம் மன்னிப்பு கோரவில்லை, வருத்தம் மட்டுமே) என்று முடித்துக்கொண்டதும் அதற்கு விசாரணை ஒன்றையும் தொடங்கியது. பாகிஸ்தான் பெரிய கூச்சல் போட்டது. அந்த விசாரணையில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டியது, பின்பு கோரிக்கை விட்டது, கெஞ்சியது. இந்தியா அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அமெரிக்கா இந்தியாவின் கூற்றை ஒப்புக்கொண்டது. உலக நாடுகளும் எதுவும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவும் டென்சனாகிவிட்டது.
ஏன்?
பாகிஸ்தானில் LOMADS என்ற HQ-16 China Aero Science and Technology உற்பத்தி செய்த Missile Shield 40 km வரை 400 -10000 meters உயரத்தில் பறக்கும் ராக்கெட்டை தாக்கி அழிக்கக்கூடியது. அந்த சிஸ்டத்தில் இருக்கும் Chinese HQ-16 என்பது BrahMos ஏவுகனையை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது என்று வாய்க்கு வாய் சீனா கூவிக்கொண்டிருந்தது. அதை நம்பி பாகிஸ்தானும் வாங்கிவிட்டது. அந்த சிஸ்டம் பாகிஸ்தானுக்குள் ஒரு துரும்பைக்கூட அண்ட விடாது என்று பாக்கும் தொடை தட்டியதும் ஆனால் பிரமோஸ் ஏவுகனையோ 18:43 முதல் 18:50 வரை 124 கிமீ தூரம் இதையெல்லாம் தாண்டி சென்றுவிட்டது.
அது மட்டுமா, பாகிஸ்தானிட உள்ள மற்றுமொரு HQ-9 என்ற Missile Shield, அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் S-300 and US Patriot ஐ விட பலம் வாய்ந்தது என்று சீனா புரூடா விட்டுக்கொண்டிருந்தது. Hong Qi-9 medium to long range for Surface to Air missiles, up to 140 km, capable of multiple air targets ஐயும் கடந்து கண்ணில் மண்ணை தூவிவிட்டு சென்றுவிட்டது பிரமோஸ். ஏற்கன்வே சீனாவின் இந்த சிஸ்டம் தரமற்றது என்று அமெரிக்கா கூறிய நிலையில், அதன் பொய்த்துப்போன தரம் இதன் மூலம் சந்தி சிரித்தது. இப்போது மற்ற நாடுகளுக்கும் சீனாவின் Missile Shield System தின் தரம் புரிந்துவிட்டது.
இதில் வரும் இன்னொரு தகவல், பாக்கின் எல்லைக்குள் புகுந்தவுடன் சீன Antimissile ராக்கெட் ஏவப்பட்டாலும் அது சில கிமீ தூரத்திலேயே விழுந்துவிட்டதாம். மற்றவை பிரமோஸை நெருங்கக்கூட முடியவில்லை.
ஏன்?
Missile Shield System என்பது ரேடார் மற்றும் நவீன சிஸ்டம் மூலம் இந்தியாவில் ஏவியவுடன் அதை கண்டுபிடித்து, ஏவுகனையின் வேகத்தைவிட மிக அதிகமான வேகத்தில் பறக்கும் ஏவுகனை எதிர்ப்பு ராக்கெட்டுகள் மூலம் அது அழிக்கப்படும். ஆனால் டுபாக்கூர் சீனா சிஸ்டமோ சில பறக்காமல் கீழே விழுந்துவிட்டது, மீதி பிரமோஸின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை, மற்றவை ஸ்டார்ட் ஆகவே இல்லை.
இதன் மூலம் வெட்ட வெளிச்சமானது என்னெவென்றால் சீனாவின் தரமற்ற சிஸ்டம் பாகிஸ்தானின் தலையில் சீனா கட்டிவிட்டது. அதை வைத்து இந்தியாவை எதுவும் செய்ய முடியாது. அதுவும் வேகம் குறைந்த 3 மெக் ஸ்பீடில் பறக்கும் இந்த ஏவுகணையையே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், இந்தியாவிடம் இருக்கும் உலகிலேயே அதிவேக பிரமோஸ் எல்லாம் வந்தால் பாகிஸ்தான் ஷீல்டு சிஸ்டத்தால் என்ன செய்ய முடியும்? இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைகள் மட்டுமல்ல, சீனாவின் வான் எல்லைகளும் பாதுகாப்பற்றது என்று உலகுக்கு தெரிந்துவிட்டது.
பாகிஸ்தான் பரபரப்பில் இருக்க, இதுவரை போரில் நிரூபிக்க படாத பல கருவிகளில் இந்த மிஸைல் உயர் தொழில் நுட்பம் கொண்ட ஷீல்ட் சிஸ்டம் அதி நவீனமானது என்று கூறிய சீனாவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது. இதை பார்த்து அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் நமட்டு சிரிப்பு சிரிக்க, சீனாவோ திருட்டு முழியோடு நெளிகிறது.
இந்தியாவின் ஒரு சிறு தவறு, பாகிஸ்தான், சீனாவின் தோலுரித்துவிட்டது! இது ஒரு மிகப்பெரிய செய்தி, ஆனால அதற்குரிய முக்கியத்துவம் இந்திய மீடியாக்களால் தரப்படவில்லை..
எனவே பகிருங்கள், இந்தியாவை தாயாக நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும்..
ஜெய்ஹிந்த்.
No comments:
Post a Comment