கேரள மாநிலத்தின் தலாயி என்ற பகுதியைச் சேர்ந்த சலீம் தன் பெண்ணான ரமீசாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தார்.
வந்தவர்கள் அனைவரும் வரதட்சிணை எதிர்பார்க்கவே அவர்களை தட்டிக் கழித்தபடியே இருந்தார். மேலும் பலர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்கள்.
"நமக்கு என்ன வசதி வாய்ப்பு இல்லையா? ஏன் இப்படி அல்லாடுகிறீர்கள்?"என்று கேட்டார் அவரது மனைவி ரூபினா."எல்லாம் காரணமாகத்தான்"என்று சொல்லி வந்தார் சலீம்.
இறுதியாக அவர் எதிர்பார்த்தபடியே ஒரு மாப்பிள்ளை கிடைத்தார். திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.
ரமீசாவின் திருமணத்தின் போது மேலும் ஐந்து பெண்களின் திருமணமும் அதே
மேடையில் நடைபெற்றது.
திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் இந்தத் திடீர் திருமணங்களைக் கண்டு வியந்து போனார்கள்.
ரமீசாவின் தந்தையான சலீம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே தனது மகளுக்கு வரதட்சணை வாங்காத ஒரு நபரையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் தனது மகளின் திருமணத்தை எளிமையான முறையில் நிகழ்த்தி, ஆடம்பர திருமணம் நடத்த ஆகும் செலவுக்கான பணத்தைக் கொண்டு பொருளாதாரத்தில் கீழ் உள்ள ஐந்து பெண்களுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி கேரள மாநிலம் வயநாடு, எடச்சேரி,கூடலூர்,மலப்புரம், மேப்பயூர் பகுதிகளிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்த ஐந்து குடும்பப் பெண்களைத் தேர்வு செய்து அவர்களது திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டார்.
முனவர் ஷாப் என்பவர் தலைமையில் எளிமையான முறையில் திருமண விழா நடைபெற்றது.
6 பேரில் இரண்டு பேர் இந்து பெண்கள் மற்றும் நால்வர் இஸ்லாமியர்கள்..
அதன்படி இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படியும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தன. இதனைத் தொடர்ந்து தன் மகள் உட்பட 6 மணப்பெண்களுக்கும் தலா 10 சவரன் நகையை சலீம் வழங்கினார். 6 பேருமே ஒரே மாதிரியான புடவையை அணிந்திருந்தனர்.
சலீமின் இந்த மதம் கடந்த மனிதநேய செயலுக்கு நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்
மணமக்கள் நீடூழி வாழ்க...
No comments:
Post a Comment