நமக்கே தெரியாம இவை உடலில் சேருகிறது. இது நல்லதா.? கெட்டதா.? இதில் நமக்கு ஏதும் தீமை இருக்கிறதா.? யாருக்கெல்லாம் இது சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள இந்த முழு பதிவையும் கடைசிவரை படியுங்கள்..!*
*காலையில் எழுந்ததும் பலருக்கு பெட் காபி இல்லை என்றால் அன்றைக்கு வேலையே ஓடாது. அதிலும் பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி இவ்வாறு காபி பழங்காலமாக குடித்து வருகிறோம். கடந்த 100 வருடங்களில் காபிக்கு நாம் அடிமையாகி விட்டோம் என்றுதான் சொல்லி வருகிறோம்.*
*நாம் பயன்படுத்தும் காபி பொடியில் வெறும் காபி கொட்டை மற்றும் அரைத்து பொடியாக்கி வைக்கவில்லை.*
*அப்படி நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முற்றிலும் தவறு. கிட்டத்தட்ட ஒரு ஸ்பூன் காபி பொடி, கால் ஸ்பூன் அளவுக்கு சிக்கரி என்ற பொருளையும் கலந்து விற்று வருகிறார்கள்.*
*சிக்கரி என்பது ஒரு செடி ஆகும்.* *இவற்றின் வேரை உலர்த்தி, வறுத்து, பொடித்து தயாரிக்கப்படுவது தான் சிக்கரி பொடி. பார்ப்பதற்கு முள்ளங்கி மாதிரி இருக்கக்கூடிய இந்த சிக்கரி செடி பிரான்ஸ் நாட்டில் எல்லா இடத்திலும் காட்டுச் செடி மாதிரி வளர்ந்து இருந்தது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.*
*அமெரிக்காவில் உள்நாட்டு போர் காரணமாக காபி பொடி கிடைக்காத இக்கட்டான காலத்தில், வேறு வழி இல்லாத மக்கள் காபி பொடிக்கு பதிலாக சிக்கரி பொடியை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.* *கடந்த 50 வருடங்களுக்கு முன்பு காபி பவுடர், சிக்கரி பொடியை கலந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.*
*இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது இவை இரண்டிற்கும்.* *இவற்றில் இருக்கக்கூடிய எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் இருக்கக்கூடிய பூச்சிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது.* *இதனால் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படும் தினங்களில் கூட இந்த சிக்கரியை பயன்படுத்துகிறார்கள். கால்நடைகளின் வயிற்றில் கிருமிகளை அளிப்பதில் இது சிறப்பாக பணிபுரியும்.*
*காபி பொடியை கலக்கும் பொழுது ஒருவித கசப்பு சுவையை ஏற்படுத்தும். இந்த சுவையை பலரும் விரும்புகிறார்கள். சிலருக்கு சற்று தூக்கலாக இருந்தால்தான் காபி அருந்திய ஒரு திருப்தியே கிடைக்கும். சிலருக்கு காபி ஸ்ட்ராங்கா இருக்கணும் நினைப்பார்கள்.*
*காபியில் சர்க்கரையின் அளவு கொஞ்சம் குறைவாகவே இருந்தால் போதும். இங்கிலாந்தில் காபி பொடி ஒரு சிட்டிகை பொடியை கலப்படம் செய்வதால் 1832இல் தடை செய்தார்கள். அதன் பிறகு 1984-ல் சிக்கரி பொடியை இப்படி காபி பொடி போடுவது, வாங்குகின்ற நுகர்வோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்கு இந்த தடையை நீக்கி இருக்கிறார்கள்.*
*தமிழ்நாட்டில் கூட நீங்கள் வாங்கும் காபி பவுடர் பாக்கெட்டில் மேலே சிக்கரி எவ்வளவு சதவீதம் கலந்து இருக்கிறார்கள் என்று தெளிவாக பிரிண்ட் செய்து இருப்பார்கள்.*
*எவ்வளவு சதவீதம் காபி பொடியில் இந்த சிக்கரி கலப்பார்கள் என்று தெரிந்துகொள்வோம்..!*
*பெரும்பாலும் சமையல் கான்ட்ராக்ட், ஹோட்டல், கேன்டீன் இதில் பயன்படுத்தும் காபி பொடியில் 60% காபியும் 40% சிக்கரியும் கலந்து இருப்பார்கள். நாம் வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தும் காபி பொடியில் 70% காபி பொடியும் 30% சிக்கரி பொடியும் கலந்திருக்கும்.* *இன்ஸ்டன்ட் காபி பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் சிக்கரி எடுத்துக்கொள்கிறார்கள். இதில் காபி பவுடர் பார்க்கவே முடியாது.*
*யாரெல்லாம் சிக்கரி கலந்த காபியை தவிர்க்க வேண்டும்...*
*கருவுற்ற பெண்கள் சிக்கரி கலந்த காபி குடிப்பது நல்லதல்ல, ஏன் என்றால் இது கருச்சிதைவை ஏற்படுத்தும்.* *அதேபோல பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது.* *குழந்தைகளுக்கும் இது பாதிப்பை உண்டாக்கும்.*
*குழந்தைகளும் உட்கொள்ளக்கூடாது, இது நாடித் துடிப்பை குறைக்கும் தன்மை கொண்டது.*
*ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்கக்கூடியது எனவே மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அதேபோல ரத்த அழுத்தத்தை குறைக்க மெடிசன் எடுத்துக் கொள்பவர்கள் சிக்கரி கலந்ததை சாப்பிடக்கூடாது இது அந்த மருந்தின் வீரியத்தை குறைக்கும்.*
*இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது சிக்கரி ஏன் கலக்கிறார்கள்* *அதனால் நன்மை இருக்கிறதா..?*
*காபியில் சிக்கரி கலப்பதால் அதில் இருக்கக்கூடிய ஹபின் அளவு குறைகிறது.* *ஹபின் குறையும் பொழுது அதிக அளவில் நம் உடலுக்கு ஆபத்தானது. அதே மாதிரி சிக்கரி உடல் சூட்டை தவிர்க்கிறது. மூச்சுத்திணறல், அஜீரண கோளாறு, தலைவலி இதையெல்லாம் சரி செய்யக்கூடியது.* *நம்முடைய மூளைக்கு நல்ல மருந்தாக செயல்படும்.*
*அதேபோல ஈரலில் வரக்கூடிய நோய்களை குணமாக்கக் கூடியது. சிறுநீர் கழிப்பதை அதிகப்படுத்தக் கூடியது. சுத்தமான காபியில் இருந்து வரும் மனத்தினால் சிலருக்கு தலைசுற்றல் வர வாய்ப்பிருக்கிறது.அதனாலும் சிக்கரி கலக்கிறார்கள்.*
No comments:
Post a Comment