#காமராசர் முதல்வராக இருந்த சமயம்..
அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.
சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர்.
உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர்..
"என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?" என அழைத்து அருகில் அமரச்செய்தார்.
இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல.. முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து..
"பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்"
"இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க..
"அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட..
"இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன்.
நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க"
-என்று ரெட்டியார் இழுக்க..
காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது.
"எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்" என்று கடுமைகூட்டினார்.
ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது..
"தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன்" என்றார்.
பெருந்தலைவருக்கு கோபம்...
"உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க"
-என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு.
நடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை. 'முதல்வர் வரமாட்டார்' என்று எப்படி சொல்வது?
பேசாமல் கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் 'காமராஜர் வரமாட்டார்' என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது.
வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்..
'என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு'
பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல. என்ற ஏலனப் பேச்சு கூடியது....
மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலை காட்ட முடியும்.
'காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள்' என்று ஊரில் நட்புக் கதையை சொன்னவராயிற்றே.
'திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார்' என்று நம்பியவாயிற்றே…
அழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாயான வீடே வெறிச்சோடிப்போனது…..
திடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ...
"முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்" என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார்.
ரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது…? நம்பிக்கையற்று உட்கார போன வேளையில்..
சட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.
ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராசர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது….
ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்..
"உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க.. .எனக்குத் தெரியும்.
அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்..
முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.. அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன்"
-என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்..
பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.
'இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது' என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்.. ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…
'நட்பை போற்றியவர் காமராஜர்' என்பதற்கு இந்த நிகழ்வைக் காட்டிலும் வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை..
(அந்த நிகழ்வில் எடுத்தபடம்தான் இது)
No comments:
Post a Comment