சாதத்தை சாப்பிட காகம் வரவில்லை என்றால் என்ன காரணம் தெரியுமா?..
காகத்திற்கு சாப்பாடு வைப்பது ஏதாவது ஒரு பரிகாரமாகவோ அல்லது தினந்தோறும் சாதம் வைக்கும் பழக்கமாகவோ கூட இருக்கலாம்.
ஆனால் வைக்கப்படும் சாதத்தை சிலசமயம் சாப்பிடுவதற்கு, எவ்வளவு தான் உரக்க கத்தினாலும் காகம் அந்த இடத்தில் பறக்கும், ஆனால் நாம் வைத்த சாப்பாட்டை வந்து சாப்பிடாது.
அந்த நேரத்தில் சாதத்தை வைத்தவர்களுக்கு மனம் ஒரு நிமிடம் குழப்பமடைய தான் செய்யும்.
எதனால் இந்த காகம் சாதத்தை சாப்பிட வரவில்லை. இந்த சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏன் காகம் சாதத்தை வந்து எடுக்கவில்லை? என்பதற்கான பதிலையும், என்ன செய்தால் காகம் சாதத்தை வந்து சாப்பிடும். என்ற பதிலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்....
நமக்கு ஒரு தண்டனை கிடைக்கின்றது என்றால், நாம் ஏதோ ஒரு தவறு செய்திருக்கின்றோம் என்றுதான் அர்த்தம்.
முதலில் நீங்கள் உங்கள் பித்ருக்களுக்கு சரியாக திதி கொடுக்கிறீர்களா என்று கவனித்து பாருங்கள். அல்லது அமாவாசை திதி கொடுக்கும் பழக்கம் உங்களாக இருந்தால் அதை நீங்கள் சரிவர செய்கிறீர்களா என்பதையும் பார்க்க வேண்டும். உங்களின் முன்னோர்களின் இறந்த திதி உங்களுக்கு தெரியவில்லையா பரவாயில்லை.
ஆனால் புரட்டாசி அம்மாவாசை அன்றோ, தை அமாவாசை அன்றோ ஆடி அமாவாசை அன்றோ, இந்த மூன்று அமாவாசைகளில் ஏதாவது ஒரு அம்மாவாசையன்று உங்கள் பித்ருக்களுக்கு நீங்கள் கட்டாயம் திதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது பெரிய தவறாகிவிடும். உங்கள் பெற்றோர்களை நீங்கள் மறந்தால் கூட காகமானது நீங்கள் வைத்த சாதத்தை வந்து எடுக்காது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அடுத்ததாக குலதெய்வ வழிபாடு. நீங்கள் உங்கள் குலதெய்வத்தை மறந்து விட்டால் கூட அது ஒரு பெரிய குற்றம் தான். 11 நாட்கள் தொடர்ந்து குலதெய்வ கோயிலுக்கு சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து மனதார 'குலதெய்வத்தை மறந்தது தவறு' என்று வேண்டிக் கொள்வதன் மூலம் அந்த குல தெய்வத்தின் கோவத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து உங்களது குலதெய்வம் வெகுதூரத்தில் உள்ளதா?... முதல் வாரம் மட்டும் அந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பி வந்தபிறகு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் வேறு ஏதேனும் மற்றொரு கோவிலில் இருக்கும் அந்த தெய்வத்திற்கு 11 நாட்கள் தொடர்ந்து விளக்கு போடுவது தவறு ஒன்றும் இல்லை. அதாவது உங்கள் குலதெய்வம் பழனிமுருகனாக இருந்தால், தொடர்ந்து தூரமாக சென்று வருவது சிரமம்தான். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி வாருங்கள்.
இந்த பரிகாரங்களை எல்லாம் மனதார நீங்கள் செய்து முடித்துவிட்டு காகத்திற்கு சாதம் வையுங்கள். நீங்கள் செய்த தவறுகள் மன்னிக்கப்பட்டு உங்கள் பித்ருக்கள் காகத்தின் ரூபத்தில் வந்து கண்டிப்பாக நீங்கள் வைக்கும் சாதத்தை சாப்பிடுவார்கள்.
அந்த கடவுளிடம், செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்பவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு வழங்கப்படும். முடிந்தால் உங்கள் தாய் தந்தையர் இறந்த தினத்தன்று ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திற்கோ அல்லது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்க்கோ உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்வது புண்ணியம்.
வாழ்க வளமுடன்...
No comments:
Post a Comment