Tuesday, April 26, 2022

அரூப லட்சுமியாக மகாலட்சுமி.. திராவிட விமானம்.. அருள்தரும் ஆஞ்சநேயர்..!!_ *அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில்...!!*

 

🙇 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🙇 சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🙇 சேலத்திலிருந்து சுமார் 41 கி.மீ தொலைவில் ஏத்தாப்பூர் உள்ளது. ஏத்தாப்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூப லட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி 'லட்சுமி கோபாலர்" என்று அழைக்கப்படுகிறார்.
🙇 இத்திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
🙇 மூலவர் சன்னதியின் மேல் உள்ள மூலஸ்தான விமானம் 'திராவிட விமானம்" எனப்படுகிறது.
🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலின் பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
வேறென்ன சிறப்பு?
🙇 பிரிந்திருந்த சிவன், அம்பிகையை மகாவிஷ்ணு இத்தலத்தில்தான் சமாதானமாக பேசி சேர்த்து வைத்தார்.
🙇 இதன் அடிப்படையில் இன்று வரையிலும் பிரச்சனைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியை சேர்த்து வைக்க உறவினர்கள் இக்கோயிலில் சமாதானம் பேசுகிறார்கள்.
🙇 இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை 'அருள்தரும் ஆஞ்சநேயர்" என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலில் தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🙇 திருமணத்தடை நீங்க, துன்பங்கள் நிவர்த்தி அடைய தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்திக்கலாம்.
🙇 இத்தலத்திலே திருமண நிச்சயம் செய்து, பின் திருமணம் செய்து கொண்டால் தம்பதியர்கள் ஒற்றுமையாக வாழ்வர்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🙇 அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றியும், சிறப்பு அபிஷேகங்கள் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...