வங்கி சேமிப்பு கணக்கிற்குத்தான் காப்பீடு இருக்குன்னு கேள்வி பட்டிருக்கிறோம் ஒரு நண்பர் ஏடிஎம் கார்டிற்கும் காப்பீடு இருப்பதாக ஒரு பதிவை வாட்ஸ்ஆப்ல் அனுப்பியுள்ளார் உங்கள் பயன்பாட்டிற்கு பகிர்கிறேன்*
*கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல் இது.*
*சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தாலோ, உயிரிழப்பு ஏற்ப்பட்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் வைத்து இருக்கும் ஏடிஎம் கார்டின் மூலமாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்பது தான் அது..*
*டெபிட்கார்டு கிளாசிக், பிளாட்டிணம் இந்த வகையை பொருத்து ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை நாம் காப்பீட்டு நிவாரணமாக பெறமுடியும்.*
நண்பருடைய தங்கை சாலை விபத்தில் மரணமடைந்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
நண்பர் தங்கை மரணமடைந்த சுமார் ஆறுமாதங்களுக்கு பின் தான் இப்படிபட்ட ஒரு காப்பீடு இருப்பதை நான் அறிந்தேன்.
உடனடியாக வங்கி கிளைக்கு சென்று அதற்குறிய ஆவணங்களை கொடுத்து அந்த காப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்தோம்.
சில மாதங்கள் சென்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிந்தேன்.
உடனடியாக வங்கி கிளைக்கு சென்று வங்கி மேளாளரிடம் இதுபற்றி கேட்டபோது, விபத்தில் மரணமடைந்த மூன்று மாதங்களுக்கு ள் விண்ணப்பிக்க வேண்டும் இதுதான் விதிமுறை. ஆனால் நீங்கள் சுமார் ஆறு மாதங்கள் கழித்து விண்ணப்பித்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று மேளாளர் கூறினார்.
உடனே நான் என் தங்கை இறந்த ஒரு மாதத்திற்க்குள் நான் வங்கிக்கு வந்து நகைக்கடனோ அல்லது பிரதமமந்திரி காப்பீட்டு திட்டமோ தங்கை பெயரில் உள்ளதா என்று கேட்டேன். அதையெல்லாம் செக்செய்து பார்த்துவிட்டு இல்லையென்று சொன்ன நீங்கள் இந்த காப்பீடு திட்டத்தை பற்றி கூறவில்லையே. கூறியிருந்தால் அப்போதே விண்ணப்பித்து இருப்போமே.
இந்த ஏடிஎம் காப்பீடு பற்றி அறிந்த நீங்கள் உங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் விபத்தில் மரணமடைந்தார் என்று உங்களிடம் நான் சொல்லும் போது இந்த காப்பீடு பற்றி கூறியிருக்கலாம். ஆனால் கூறாமல் விட்டுவிட்டீர்கள்.
இந்த காப்பீடு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு முதல் காரணம் விசயம் அறிந்த நீங்கள் எங்களிடம் சொல்லாதது தான் என்று அவரிடம் விவாதித்தேன்.
அதற்கு அப்போது சரியான பதில் ஏதும் கூறாமல் சப்பைகட்டு கட்டினார்.
இந்த சம்பவம் குறித்த விழிப்புணர்வு பதிவை நான் அப்போது முகநூலில் பதிந்தேன்.
No comments:
Post a Comment