Tuesday, April 26, 2022

''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"

இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அத பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன் சொன்னான்.
சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சி. கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க. அப்படி குதிக்கும் போது ரெண்டு ஆரஞ்சுப் பழம் கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அத அவங்க கண்டுக்கல.
கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.
அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.
"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
இத கேட்ட அவனுக்கு மொத்த போதையும் தெளிஞ்சிடிச்சி. விழுந்தடிச்சி ஓடினான். அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக் கிட்டு இருந்தார். இவன் உடனே அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.
"சாமி! தயவு செய்து என் கூட வாங்க. கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."
சாமியாருக்கு ஒன்னும் புரியல. ஆனாலும் அவன் ரொம்ப வருந்தி கூப்பிட்டதனால அவன் கூட போனாரு.
சுடுகாட்டுல இருந்து அந்த சத்தம் கேட்டது,
"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, "எனக்கொன்னு"
திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.
"ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"
"எனக்கு."
"இல்லயில்ல. எனக்குத் தான்."
அவ்வளவுதான்..
"நாங்க இன்னும் சாகல. நாங்க இன்னும் சாகல"ன்னு அலறிக் கிட்டே, சாமியாரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...