தெருவின் பெரிய சாக்கடை (சைபன்)அடைச்சுகிட்டது. உடனே ஒரு யோக்யமான அடைப்பு எடுக்கறவரை கண்டுபிடிச்சு சுத்தம் பண்ண ஏற்பாடு பண்ணாங்க.
எல்லாரும் சுத்தம் செய்யறவரை அழைத்து எவ்வளவு நேரம் ஆகும் துப்புரவா சுத்தம் செய்யன்னு கேட்டதும்... அவர் 5 மணி நேரம் முழுசா ஆகும்னு சொன்னார். எல்லோரும் ஒத்துகிட்டு வேலையை ஆரம்பிக்கச் சொன்னாங்க.
சைபனைத் திறந்து உள்ளார நுழைந்து சுத்தம் செய்யும் வேலை ஆரம்பமானது. 4 மணி 30 நிமிடமானதும் வெளியே இருந்தவங்க அமைதி இழக்க ஆரம்பிச்சாங்க. ஓரொருவரா சாக்கடை அருகில் வந்து குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க.. முடிஞ்சுடுத்தா... முடிஞ்சுடுத்தான்னு.
அடைப்பு எடுப்பவர் வெளியே தலையைக் காட்டி.. இன்னும் பாதி வேலை கூட முடியல்லைன்னு சொன்னார். உடனே... அத்தனை பேரும் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க.
நீ சரியில்லை. சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணுன்னு சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பிச்சாங்க.
பிறகு அடைப்பு எடுப்பவர் நிதானமாக... அங்கிருந்தவங்களைப் பார்த்து இதுக்கு முன்னால இந்த சைபனை எப்ப சுத்தப் படுத்தினீங்கன்னு கேட்டாரு. அதுக்கு அவங்களோட பதில்.. அது இருக்கும் 70 வருஷம்.. இல்லை இல்லை அதுக்கும் மேலேயேன்னு சொன்னாங்க.
அப்ப சுத்தம் பண்ண வந்தவர் கேட்டாரு.. நீங்க உங்க சாக்கடையை 70 வருஷத்துக்கும் மேல சுத்தப்படுத்தல்லை. அதை சுத்தப்படுத்தணும்னே தோணல்லை உங்களுக்கு. இப்ப சுத்தப்படுத்த முன் வந்த என்னை... நிதானமா செய்யறேன்.. சொன்ன வாக்கு தவறிட்டீங்கன்னு குறை பாடறீங்க. இந்த சைபனில் எந்த அளவு அழுக்கு இருக்கும்னு எனக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் புரிந்தது. நான் வெளியே இருந்து பார்த்ததை விட, எதிர்பார்த்த அளவை விட பல மடங்கு அதிகப்படியான அழுக்கும் கசடும் இதில் இருக்கு. இப்ப என்ன பண்ண சொல்லறீங்கன்னு கேட்டாரு.
சுத்தம் செய்பவர் தொடர்ந்து சுத்தம் செய்யணுமா?
இல்லை மேல மேல அழுக்கையும் குப்பையையும் கொட்டினவங்களிடமே விட்டுட்டுப் போகணுமா.?
1)சுத்தம் செய்பவர் நிதானமாக சுத்தம் செய்தார்னு குற்றம் சாட்டலாம். ஆனால் இதுவரை சுத்தமே செய்யாததால் எதோட ஒப்பிட முடியும்..?
2)சுத்தம் செய்தவர் வெளியே இருந்து இருக்கும் கசடின் அளவை குறைத்துச் சொன்னதற்காக குற்றம் சாட்டலாம். ஆனால் சாக்கடை முழுவதும் கசடாக, குப்பையாக, மலமாக இருப்பதற்காக சுத்தம் செய்பவரை குற்றஞ்சாட்ட முடியுமா..?
3)இல்லை அந்த குப்பைகளை சேர்த்தவர்களை, இதுநாள் வரை சுத்தம் செய்ய ஒருவரைக்கூட கண்டுபிடிக்காத குற்றத்தையும் அவர் மேல் போட முடியுமா?
4)வேலையே செய்ய வேண்டாம். வெளியில வா சாக்கடை தாராளமாக அடைச்சுக்கட்டும்னு சுத்தம் செய்ய முன் வந்தவரை துரத்தத்தான் முடியுமா?
இந்தக் கதை 2019 தேர்தல் சம்பந்தப்பட்டதோ இல்லை 1947 லேந்து நேரு குடும்பம் செய்ய அட்டூழியங்களைப் பற்றியதோன்னு நீங்க நினைச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது
No comments:
Post a Comment