உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !
உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !
தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !
?ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் !
வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
?"நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்.
என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது,என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்.அது தான் முக்கியம்.
?டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.
ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்.
என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை.
?எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள்,தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.
அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
?"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை.
?"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்
?அதேபோல் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் உங்களால் சரியான உறவை பேண முடியாமல் போயிருக்கலாம். மனம் திறந்த உரையாடல் மூலமும் ,வெளிப்படையான செயல்களாலும் அதை சரிகட்ட முயலுங்கள். அதைவிட வரும்காலங்களில் நம்பிக்கையுடன் அன்பை மிக நேர்த்தியாக பகிருங்கள்.
?இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது
சமர்ப்பணம்.
No comments:
Post a Comment