சார் நமஸ்காரம் எனக்கு ஒரு சந்தேகம் உங்க பிரமணர்கள் வீட்டில் ஆண் குழந்தைகளை அம்பி அம்பி என கூப்பிடுகிறார்களே ஏன் சார்?
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தம்பி என்று கூப்பிடுவது போல் நீங்கள் அம்பி என்கிறீர்களோ?
முதலில் உட்கார் தம்பி எங்களது பிராமண பெரியவர்கள் எதையும் காரணகாரியமில்லாமல் கூற மாட்டார்கள்
வீட்டில் முதலில் பிறக்கும் ஆண்பிள்ளையை அம்பி என கூப்பிடுவார்கள் ஒரு சில இல்லத்தில் மூத்தவனை பெரியம்பி என்றும் இளையவனை சின்னம்பி என்றும் கூறுவர்
அம்பி என்றால் நாவாய் அதாவது கட்டுமரம் அல்லது படகு என பொருள் உண்டு
கட்டுமரம் படகு நாவாய் என எப்படி அழைத்தாலும் அது மனிதனை அல்லது ஒரு பொருளை தண்ணீரின் ( சமுத்திரத்தின்) ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு கொண்டு செல்ல பயன்படும் ஒரு சாதனம்
அது போல் தன்னை பெற்றவர்களை சம்சாரம் என்ற கடலில் இருந்து புறப்படும் போது அவர்களுக்கான இறுதி கைங்கர்யங்களை செய்து மறுகரையில் உள்ள பிதுர்களிடம் சேர்க்க ஒரு படகை போல் பயன்படக்கூடியவன் ( இறப்பிற்க்கு பின் தர்பணங்களால் சிரார்தங்களால் பிதுர்லோகத்திலிருக்கும் தமக்கு அங்கிருந்து வேறு லோகம் செல்ல பயன்படுபவன்) என குறிப்பிடவே அம்பி என்கின்றனர்
ஒரு வேளை பெரியவனால் செய்ய இயலாமல் போகும் பட்சத்தில் அவனுக்கு அடுத்த இளையவன் செய்வான் என்ற நோக்கத்தில் சின்னம்பி என்பர் இது தான் அம்பி என்று அழைப்பதன் காரணம்
No comments:
Post a Comment