Tuesday, April 26, 2022

பெண் எம்.பி., கைது ஏன்? அறிக்கை கேட்கிறது உள்துறை!

 லோக்சபா பெண் எம்.பி., நவ்நீத் ராணா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.மஹாராஷ்டிராவை சேர்ந்த சுயேச்சை பெண் எம்.பி., நவ்நீத் ராணா, அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ராணா ஆகியோர், சிவசேனாவை சேர்ந்த முதல்வர் உத்தவ் தாக்கரே வீடு முன், அனுமன் சாலிசா பாட இருப்பதாக அறிவித்தனர்.

இதற்கு, அக்கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் தம்பதியரை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


latest tamil news



இதற்கிடையே, 'எம்.பி., -- எம்.எல்.ஏ., ஆன எங்கள் மீது, முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவின்படி, தேச துரோக வழக்கு பதிவு செய்த மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நவ்நீத் கூறினார். கைது செய்யப்பட்டபோது, போலீசார் தங்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் குற்றம் சாட்டினார்.இது தொடர்பாக, லோக்சபா சிறப்புரிமை மற்றும் நெறிமுறைக் குழு பரிந்துரையின் பேரில், நவ்நீத் ராணா கைது நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர
விட்டு உள்ளதாக அதிகாரிகள் நேற்று கூறினர்.

இதற்கிடையே, நவ்னீத்தும், ராணாவும் தாக்கல் செய்த ஜாமின் மனு, மும்பை தனி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில், போலீசார் அளிக்கும் பதிலை கேட்டுவிட்டு, மனுவை விசாரிப்பதாக கூறிய நீதிபதி, 29ல் இது குறித்த முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...