‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’
பாடல் காட்சியின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்... ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’.. என்ற வரிகள் இடம்பெறும்.
அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம்பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் ஸ்ரீதரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, படத்தின் ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.
‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போதுதான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.
ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’ ......
மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.! நன்றி: இந்து தமிழ்
No comments:
Post a Comment