Monday, April 18, 2022

வெளி நாட்டுக்காரன் திங்கிறத நம்ம ஆளுங்க சாப்பிடட்டும்.

 இலங்கை நிலமை இந்தியாவுக்கு வராமல் தடுக்க நமது இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.


 உண்மையைக் சொல்ல போனால் நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் நம்ம பக்கத்தில் உள்ள நம்ம சொந்தக்காரர்,

 மாமன்,மச்சான் கடைகளில்தான் வாங்க வேண்டும்.


பத்து ரூபாய் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.


 வெளி நாட்டுக்காரன் திங்கிறத நம்ம ஆளுங்க சாப்பிடட்டும்.


 நம்ம வீட்டு எல்லா  நிகழ்ச்சியிலும் நம்ம சொந்தக்காரர்கள் தான் கலந்து கொள்வார்கள்.


 அமேசான் கம்பெனிகாரனோ பிளிப்கார்டு கம்பேனிகாரனோ எந்த ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் கம்பெனிகாரனோ உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.


 அரசு வேலை எல்லா மக்களுக்கும் கிடைக்காது.


 கொடுக்கவும் முடியாது.


 சுயமாக தொழில் செய்யும் சின்ன கடைகளிலும் தெருவில் கொண்டு வரும் சிறு வியாபாரிகளிடமும் பொருட்கள் வாங்க வேண்டும்.


 அவர்கள் குடும்பங்கள் வாழ உதவி செய்ய வேண்டும்.


 இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் சீனாவின் கம்பெனிகளே?!


 சீனா பொருட்கள் மலிவான விலையில் கிடைத்ததால் இலங்கை மக்கள் சீனா தயாரிப்பு பொருட்களை மட்டுமே வாங்கி மகிழ்ந்தனர்.


 அதனால்  உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது.


எந்த நாடாக இருந்தாலும் சொந்த நாட்டின் தொழில்களை ஊக்க படுத்த வேண்டும்.


 பொது மக்கள் சொந்த நாட்டில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.


நமது நாட்டின் படிக்காத ஏழை மக்கள் காடுகளில் ஈத்த ஓலை புல்லுகளை சேகரித்து வெளக்குமாறு கட்டி தயார் செய்து தலையில் சுமந்து கொண்டு வீடு வீடாக சென்று விற்பனை செய்து அவர்கள் குடும்பங்கள் வாழ்ந்தார்கள்.


அதையும் சீனாவின் சுற்றுசூழலை மாசு படுத்தும் பிளாஸ்டிக் வெளக்கு மாறை விற்பனையில் இறக்கி அவர்கள் பிழைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டார்கள்.


முன் காலங்களில் தென்னை மட்டையில்  கயிறு முறுக்கி கயிற்றால் தயாரிக்க படும் தரை விரிப்புகள் பயன்படுத்தினார்கள்.


 அதை சீனாவின் சுற்றுசூழலை மாசு படுத்தும் ரப்பர் தரை விரிப்புகளை இறக்கி படிக்காத ஏழை மக்கள் தொழிலை இல்லாமல் செய்து விட்டார்கள்.


 ஆற்றில் கோரம் புல்லுகளை சேகரித்து பாய் நெய்து லட்சக்கணக்கான மக்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதித்து அவர்கள் குடும்பத்தினர் வாழ்ந்தார்கள்.


அதையும் சீனாவின் சுற்றுசூழலை மாசு படுத்தும் பிளாஸ்டிக் பாய்களை இறக்கி அவர்கள் தொழில்களும் நஷ்டம் அடைந்துள்ளன.

 

வெளிநாட்டு கம்பெனிகளிடம் பல கோடிகள் நன்கொடை வாங்கி ஆன்லைன் கம்பெனிகளை ஊக்கப்படுத்துவதை விடுத்து


 சுயமாக தொழில் செய்யும் தொழிலாளிகளை தட்டி கொடுத்து ஊக்க படுத்துங்கள்.


 இல்லை என்றால் இலங்கையை விட இந்தியா மோசமான நிலைக்கு தள்ளபடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...