நவீன மருத்துவ சின்னம் கடுசியஸ் (Caduceus) என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பாம்புகள் ஒரு கோளில் பின்னப்பட்ட இந்த சின்னம் எங்கிருந்து வந்தது? ஒரு கிரேக்க கடவுளின் கைதடி தான் இந்த சின்னம். அது சரி இரண்டு பாம்புகள் பின்னப்பட்ட சின்னத்தை ஏன் அவர் கைதடியாய் வைத்திருந்தார்.
எல்லாவற்றிக்கும் விடை தமிழ் நாகரிகத்தில் தான் கிடைக்கும். ஏன் என்றால் தமிழ் குடி தான் மூத்த குடி என்பதால். முதல் தமிழ் சங்கம் நடத்திய சிவனை கிரேக்கர்கள் போசெடின் ( poseidon )என்று வணங்குகிறார்கள். இரண்டாம் தமிழ் சங்கம் நடத்திய தமிழ் கடவுள் முருகனை அவர்கள் சியஸ் ( zeus) என்று வணங்குகிறார்கள். கடவுள் சீயஸ் தான் கடுசியஸ் (Caduceus) ஆக மாறி உள்ளது. சிவன் முருகன் எல்லோரும் சித்தர்கள் தானே.
இந்த இரட்டை பாம்பு சின்னம் அசோகர் காலத்து நாணயணங்களிலும் பொறிக்க பட்டு உள்ளது.
நம்ம ஊர் அரச மரங்களிலும் இந்த இரட்டை பாம்பு சிலைகளை பார்க்கலாம்.அப்படி என்ன தான் இந்த பாம்புகள் குறிக்கின்றன? அதற்கும் நம் அரச மரத்திற்கும் அப்படி என்ன சம்மந்தம்?
நம் உடலில் பல நாடிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது மூன்று நாடிகள். அவை இடகலை , பிங்கலை , சுழுமுனை என்பன.வலைவானதை பாம்புகள் என்று சொல்வது வழக்கம். இடகலை , பிங்கலை நாடிகள் வலைவானதாக இருப்பதால் அவை பாம்புகளாக சித்தரிக்க படுகின்றன.இந்த மூன்று நாடிகளும் சேரும் இடத்தை ஆற்றல் மையம் அல்லது சக்கரம் என்று அழைக்க படுகிறது. நவீன அறிவியலில் சொல்ல படும் நாளமில்லா சுரப்பிகள் உள்ள இடங்கள் தான் இந்த சக்கரங்கள்.நம் உடலில் உள்ள உயிர் சக்தியின் மையம் மூலாதாரம் என்ற கீழ் சக்கரத்தில் இருக்கும். இதை மேல் சக்கரங்கள் ஆன ஆக்கினை மற்றும் சகஸ்ரகாரத்திற்கு மாற்றுவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்தார்கள்.
தமிழ் கலாசாரத்தின் கதாநாயகர்கள் சித்தர்கள். இவர்கள் குண்டலினி என்ற உயிர் சக்தியை மேலெழுப்பியவர்கள். இந்த சித்தர்கள் மருத்துவ துறைக்கு ஆற்றிய பங்களிப்பு மிக பெரியது.
தமிழர்கள் சமயம் ஆசுவிகம் என்ற சமணம். ஆசு + ஈவு+ அகம் = ஆசுவிகம், ஆசு என்றால் உடனடி என்று பொருள் , ஈவு என்றால் தீர்வு என்று பொருள். உடனடி தீர்வு தரும் இடம் என்பது ஆசுவிகம் என்பதன் பொருள். இது ஒரு இடவாகு பெயர். முன்பு தமிழ் மக்கள் தங்களுக்கான திர்வுகளுக்கு சித்தர்களை நாடினர். சித்தர்கள் மலைகளில் வாழ்ந்தார்கள்.
மக்கள் தொகை அதிகமாக அதிகமாக சித்தர்களே ஊருக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து மக்களுக்கு வேண்டிய தீர்வு கொடுத்தார்கள். அந்த நாள் சதுர்த்தி என்னும் நான்காவது நாள்.மக்கள் வானில் மூன்றாம் பிறை பார்த்து காத்து இருந்தனர். சித்தர்கள் நினைவாக தான் விநாயகர் என்ற கடவுள் உருவாக்க பட்டுள்ளது. அதனால் தான் சித்தி விநாயகர் என்று அழைக்கிறோம்.
ஊரில் மக்களை சித்தர்கள் அரச மர அடியில் சந்தித்தார்கள்.
ஆர் = உயர்ந்த , ஆசு = உடனடி
ஆர் + ஆசு = அரசு
மக்களை நிர்வகிக்கும் அமைப்புக்கு அரசு என்று இப்படி தான் பெயர் வந்தது.
சித்தர்களும் சமணர்களும் ஒருவரே தாங்கள் தூங்கும் பள்ளிகளில் கல்வியை போதித்தர்கள். பள்ளி என்பது மேடு பள்ளமாக உள்ள பாறை தரையை சமதளமாக ஆக்க எடுக்கப்படும் சிறிய பள்ளம்.
ஆசு + அறியர் = ஆசிரியர்
கல்வி கற்றவர்கள்
ஆசு + அறி = ஆசாரி
கற்றவர்கள் அறத்தோடு வாழ அறிவுறுத்த பட்டனர்.
ஆசு + அறம் = ஆசாரம்
கலைகளில் தேர்ந்தவர்கள் அறத்தோடு மக்களுக்கு சேவை செய்வது.
கலை + ஆசாரம் = கலாச்சாரம்.
No comments:
Post a Comment