பிரின்ஸ்,DSP இந்த இரண்டு படங்களின் பெயர்களை சொன்னாலே போதும் சொல்ல வந்த கருத்தை ஓரளவிற்கு நீங்களே யூகித்து விடுவீர்கள். சரசரவென உயரத்திற்கு சென்ற இருவரின் மார்க்கெட்டும் அதே வேகத்தில் கீழே இறங்குவதாக தோன்றுகிறது. சிிகார்த்திக்கேயனுக்காவது
அதிகாலை காட்சிகள் இருக்கிறது.
விஜய் சேதுபதி போல உச்சத்தில் இருக்கும் நடிகரின் பட ரிலீஸ்
எப்படி இருந்திருக்க வேண்டும்.
எந்த சலனமும் இல்லாமலா வெளிவர வேண்டும்.சூப்பர் டீலக்ஸ்,சூது கவ்வும்,தர்மதுரை போன்ற படங்களை எவ்வளவு கொண்டாடினோம் அந்த விஜய் சேதுபதி எங்கே போனார்.
கனா,நம்ம வீட்டு பிள்ளை,எதிர் நீச்சல் யோன்ற படங்களில் நடித்த சிவ கார்த்திகேயனை அல்லவா தேட வேண்டி இருக்கிறது.கதை தேர்வில் ஏன்?இருவரும் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள். தங்களை நம்பி டிக்கெட் எடுத்து திரையரங்குகுள் வரும் ரசிகனை சங்கடபடுத்தி அனுப்பவதில் என்ன லாபம்.
எல்லாத்துறையிலும் வெற்றியும்,
தோல்வியும் சகஜம்தான் என்றாலும் புதுமையில்லாத கதைகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்றுவது....!'சிவ கார்த்திக்கேயன் என்றால் எண்டெர்டெயினர் இருக்கும்,விஜய் சேதுபதி என்றால் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பார் 'என்ற வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் இருவரின் உழைப்பும் சாதாரணமானது இல்லை.
இருவரும் எந்த வித நட்சத்திர பிம்பமும் இல்லாமல் படிப்படியாக முன்னுக்கு வந்தவர்கள். விஜய் டிவியில் மிமிக்ரி செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கும்,பத்தோடு பதினொன்றாக சக நடிகனாக வந்து போன ஒரு இளைஞனுக்கும்,தமிழ் திரையுலகமும்,ரசிகர்களும் எவ்வளவு பெரிய அங்கீகாரத்தை தந்திருக்கிறார்கள்.
அதற்காகவது கதை தேர்வில் கவனம் செலுத்தி வருடத்திற்கு ஒரு படம் தந்தாலே போதுமே....!அதை தானே மற்ற முண்ணனி நடிகர்களும் செய்கிறார்கள். விஜய்,அஜித்,சூர்யா,
விக்ரம் போன்ற நடிகர்களின் படங்கள் தோற்றாலும் படத்தில் அவர்களுடைய நடிப்பு பேசப்படும். ஆனால் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பே இல்லாத கதைகளை அவர்கள் தேர்வு செய்வதில்லை.
ரசிகர்களை இங்கு தான் அவர்கள் தக்க வைக்கிறார்கள். திருப்திப்படுத்தி அனுப்புகிறார்கள்.ஒருக்கட்டத்தில் தனுஷ் படங்களை மிஞ்சும் அளவிற்கு சிவ கார்த்திகேயன் பட வசூல் இருந்தது. விஜய் சேதுபதி கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் தவம் கிடந்தார்கள். இன்றோ படம் ரிலீஸான அன்று மாலைக்காட்சிக்கு இரண்டு,மூன்று பைக்குகளை மட்டும்தான் காண முடிவது ஏதோ ஒரு புதுமுக நடிகரின் படம் போன்ற உணர்வை தான் தருவது தான் கசப்பான உண்மை...!
No comments:
Post a Comment