என்னை சுப காரியங்களுக்கு பத்திரிகை வைத்து அழைக்கும்போதேல்லாம், வெறும் பத்திரிகையை நீட்டி “வந்துடுங்க “என்று சொல்வார்கள்.
இதே என் பக்கத்திலிருக்கும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, மஞ்சள் குங்குமம் என்று வரிசையுடன் வைத்து அழைப்பார்கள். பக்கத்திலே உட்கார்ந்திருக்கும் என் முறை வரும்போது, மஞ்சப்பைக்குள்ளே துழாவி வெறும் பத்திரிகை மட்டும் கொடுப்பார்கள். அவர்கள் கையில் மஞ்சள் குங்குமம் தட்டுப்பட்டாலும், அதனை கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் கைகள் பைக்கு உள்ளே போய் போய் வெளியே வரும்போதெல்லாம் எனக்கு வேதனை மனதை
பிசையும். கடைசியில் அவர்கள் கைகளே ஒரு முடிவுக்கு வந்து, வெறும் பத்திரிகையை நீட்டும்.
ஏன் அம்மா! அந்த பத்திரிகையுடன் பூ, வெற்றிலை பாக்கு பழம் கொடுத்தால் நான் என்ன தலையில் சூடவா போகிறேன்? நேரே கொண்டு போய் சாமி படத்திற்கு முன்னாடி வைக்க போகிறேன்! கணவர் இல்லாததால் அவரை நினைத்து வாழும் எனக்கு ஒரு சாதாரண மரியாதையை கூட கொடுக்க மறுப்பது ஏன்? என்று வருத்தத்துடன் கூறினார் .
எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை!
அவர்கள் வார்த்தையில் நியாயம் இருந்தால் உங்கள் கமெண்ட் ‘எஸ்’ என்று கொடுத்து இவரைப் போன்ற பெண்களுக்கு ஆறுதலை தருவோம் .
மூட நம்பிக்கை தூக்கி எறியுங்கள்.
No comments:
Post a Comment