#காபி_டே நிறுவனத்தின் உரிமையாளர் #சித்தார்த்தா தற்கொலைக்கு பிறகு,
அவரது மனைவி #மாளவிகா_ஹெக்டே அதீத கடனில் தத்தளித்த நிறுவனத்தை தூக்கி நிறுத்தி, வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாதித்துள்ளார்.
.
பிரபல காபி டே நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாடு முழுவதும் 165 நகரங்களில் செயல்பட்டு வந்த முன்னணி நிறுவன உரிமையாளர், தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிறுவனத்தின் பெயரில் அவருக்கு இருந்த கடன்கள் காரணமாக முதலீட்டாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகள், வருமானவரி துறையினரின் குற்றச்சாட்டுகள் என பல காரணங்களால் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவரின் தற்கொலை செய்தபோது, காபி டே நிறுவனத்திற்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்தது.
.
இந்த சூழலில் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதிகளவிலான கடன், முதலீட்டாளர்களின் அதிருப்தி என அவருக்கு முன்னால் இருந்த ஏராளமான சவால்களை எதிர்கொண்டு, சிறப்பாக செயல்பட துவங்கினார்.
துணிச்சலாக அனைத்தையும் சமாளித்த மாளவிகா, 18 மாதங்களில் 3500 கோடி அளவிற்கு அந்நிறுவனத்தின் கடனை குறைத்தார்.
.
தொடர்ந்து வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய மாளவிகா, தன் கணவரின் காபி டே நிறுவனத்தின் கடனை பெருமளவு குறைத்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளார்.
கணவரின் மறைவால் துவண்டு போகாமல், அதீத கடனையும் வென்று சாதித்துள்ள மாளவிகாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துக்கள் மேடம்.
No comments:
Post a Comment