நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டுத் திருவிழாவில் பளு தூக்கும் போட்டியில் மொத்தமாக நான்கு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார் மத்திய பிரதேஷ் போபால் நகரை சேர்ந்த 18 வயது முஷ்கான் கான்.
முஷ்கானின் கோச்சராக செயல்படும் அவரது தந்தை முஹம்மது தாரா கான் கூறுகையில் எனது மகள்களுடைய ஆசைகள் எதுவோ அதனை எட்டிப்பிடிக்க நான் ஆர்வமூட்டுகிறேன், அவர்களுடைய லட்சியங்கள் எனக்கு பெருமைத்தேடி தருகின்றன எனக்கூறி பெருமிதப்படுகிறார். கொரனா கால இரண்டு ஆண்டு பயிற்சிகளின் போது பளு தூக்கும் ஆர்வம் முஷ்கானிடம் மிகைத்திருந்த காரணத்தால் அவருக்கு அதில் பயிற்சி கொடுத்தேன், அதற்கான பலன் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது என்கிறார் இந்த தங்க மங்கையின் தந்தை.
முஷ்கான் இதற்கு முன்னதாக தேசிய பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு இரு தங்க மெடலும் ஒரு வெள்ளி மெடலும் பெற்றவர் என்பதும், காமன் வெல்த் போட்டிகளுக்காக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேர்களில் முஷ்கான் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment